2 ஜூன், 2010

வார்த்தைகளை வாபஸ் பெற்ற சிதம்பரம்:அப்துஸ்ஸமது பட்கல் புனே குண்டுவெடிப்பில் சந்தேகத்திற்குரியவர் மட்டுமே

புதுடெல்லி:புனே குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அப்துஸ்ஸமது பட்கல் சந்தேகத்திற்குரிய நபர் மட்டுமே என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (திங்கள் கிழமை) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ப.சிதம்பரம் இதனை தெரிவித்தார்.

அப்துஸ்ஸமது பட்கல் மங்களூர் விமானநிலையத்தில் வைத்து மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸால் கைது செய்யப்பட்டவுடன் ப.சிதம்பரம் புனே குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுவிட்டார் எனவும், 100 நாட்களில் முக்கிய குற்றவாளியை கைது செய்த ஏ.டி.எஸ்ஸை பாராட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் சட்டத்திற்கு புறம்பாக ஆயுதத்தை கைவசம் வைத்திருந்தார் என்ற வழக்கில்தான் 23 வயதான அப்துஸ்ஸமது பட்கலை கைது செய்திருந்தது போலீஸ்.

பிப்ரவரி 13ஆம் தேதி புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில் அப்துஸ்ஸமது மீது சந்தேகம் மட்டுமே உள்ளது என போலீஸார் கருதுகின்றனர்.

வழக்கின் தொடர் நடவடிக்கைகளை பாதிக்கும் விதமாக உள்துறை அமைச்சர் என்ற முக்கிய பொறுப்பில் உள்ள ப.சிதம்பரம் முன் யோசனை இல்லாமல் பேட்டியளித்ததோடு போலீஸாரை புகழ்த்தியது கண்டனத்திற்கிடையானது.

மே 25ஆம் தேதி மங்களூர் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அப்துஸ்ஸமது புனே குண்டுவெடிப்பு நடந்த நாளில் குடும்ப திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உணவு பரிமாறும் வீடியோவை அவரது குடும்பத்தினர் வெளியிட்டிருந்தனர்.

போலீசாரின் போலியான குற்றச்சாட்டுகளை அவரது குடும்பத்தினர் மறுத்தனர். அதேவேளையில் அப்துஸ்ஸமதின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது. அப்துஸ்ஸமதை இம்மாதம் 14 ஆம் தேதி வரை ஜூடிஸியல் கஸ்டடியில் ரிமாண்ட் செய்தார் மும்பை மெட்ரோபோலிடன் மாஜிஸ்ட்ரேட் எம்.வி மொராலே.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வார்த்தைகளை வாபஸ் பெற்ற சிதம்பரம்:அப்துஸ்ஸமது பட்கல் புனே குண்டுவெடிப்பில் சந்தேகத்திற்குரியவர் மட்டுமே"

கருத்துரையிடுக