2 ஜூன், 2010

இஸ்ரேலின் தாக்குதலும் இந்திய ஊடகங்களின் அமைதியும்

நூற்றுக்கணக்கான மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் புறப்பட்ட 'Freedom Flotilla' என்ற பெயருடன் சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்பட்டு மேலும் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்கவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலால் திறந்த சிறையாக மற்றப்பட்ட காஸா மக்களுக்காக உணவுப்பொருட்கள் கட்டுமானப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என 10000டன் பொருட்களுடன் புறப்பட்ட இந்தக் கப்பலில் துருக்கி கிரீஸ் உட்பட பல நாட்டு சமூக ஆர்வலர்கள் பயணம் மேற்கொண்டனர்.

உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்த வண்ணம் இந்தக் கப்பலை காஸ்ஸாவிற்கு செல்லவிடாமல் சுமார் 150 கிலோமீட்டருக்கு கடல் பகுதியில் இஸ்ரேல ஆக்கிரமிப்பு இராணுவதால் சிறை பிடிக்கப்பட்டது.

பல நாடுகள் இஸ்ரேலிடம் நிவாரணப் பொருட்களை கொண்டு வந்த கப்பலை காஸ்ஸாவிற்குள் அனுமதிக்குமாறு கூறியும் வழக்கம் போல தனது அடவடித்தனமே இஸ்ரேலின் பதிலாக இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பின் நேற்று காலை இஸ்ரேல ராணுவம் அதிரடியாக கப்பலுக்குள் தமது ராணுவத்தை அனுப்பி கப்பலில் இருந்த பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரின் மீதும் மிருகத்தனமான தாக்குதலை நடத்தி கிட்டத்தட்ட இருபதிற்கும் அதிகமான மக்களை கொன்று குவித்துள்ளது.

கப்பலில் ராணுவம் செய்த அட்டூழியங்களை கப்பலில் வைக்கப்பட்ட ரகசிய கேமரா மூலம் AL JAZEERA தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. ஆனால் இதை மறுத்த இஸ்ரேலிய அரசு வழக்கம் போல கப்பலில் இருந்தவர்கள் ராணுவத்தை நோக்கி தாக்குதல் நடத்தினர். எனவே தான் ராணுவம் தாக்குதல் நடத்த நேரிட்டது என ஒரு அற்பமான பொய்யை கூறி உள்ளது இந்தத் தாக்குதலில் இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் துருக்கியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இத்தாக்குதல் குறித்து உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியை முதன்மை செய்தியாக வெளியிட்டன.

ஆனால் இந்திய ஊடகங்களை தவிர. குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மிகவும் கேவலமான முறையில் அப்படி ஒரு தாக்குதலே நடக்க வில்லை என்பது போல ஒரு செய்தியையும் வெளிவிட வில்லை. இது தான் பத்திரிக்கை சுதந்திரம்.அதே நேரத்தில் பலஸ்தீனியர்களின் தாக்குதலில் ஒரு இஸ்ரேலியர் காயம் பட்டாலும் அதை பெரிய செய்தியாக போடும் நமது ஊடகங்களின் நடுநிலை தன்மை இதுதான்.

வெளிநாடுகளில் இருந்து காஸ்ஸாவிற்குள் செல்ல நினைத்த அதுவும் உணவுப்பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காத காஸ்ஸா மக்களுக்காக வீடு கட்டுமானப் பொருட்கள் உணவுப் பொருட்கள் என மனிதாபிமான பொருட்கள் கொண்டு சென்ற இவர்களுக்கே இந்த நிலை என்றால் காஸ்ஸாவில் வாழும் மக்களை நினைக்கும் போது அவர்கள் படும் துன்பங்களை நினைத்துப் பார்க்கவே முடியாது.

இதில் இன்னொரு கொடுமை என்னவெனில் மனித உரிமையை பற்றி சிறிதும் கவலைப்படாத இஸ்ரேலிடம் நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்கள் இருந்தும் இதைப் பற்றி ஒரு கண்டனத்தையோ அல்லது அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூறாத அமெரிக்கா தனது மின் தேவைக்காக அணுவை பயன்படுத்துவதை கூட ஈரானுக்கு அனுமதி அளிக்க மறுக்கிறது.

என்றைக்கு இருந்தாலும் இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பது உலக நாடுகளுக்கு ஆபத்து தான் என்பதற்கு இந்த கொடூர தாக்குதலும் ஒரு உதாரணம்.

உலக நாடுகள் இப்பொழுதே முன் வந்து இஸ்ரேலின் கொடூரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதே அமைதியை விரும்பும் ஒவ்வொரு சராசரி மனிதனின் எதிர்பார்ப்பு.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேலின் தாக்குதலும் இந்திய ஊடகங்களின் அமைதியும்"

கருத்துரையிடுக