9 ஜூன், 2010

தடை என்றால் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை- அஹ்மத் நிஜாத்

இஸ்தான்புல்:ஈரானுக்கெதிராக தடையை ஏற்படுத்தினால் அணுசக்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை அளித்துள்ளார்.

"அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தடை என்ற பயம் காண்பித்து ஈரானை அடக்கிவிடலாம் என கனவுக்கண்டால் அது ஒருபோதும் நடக்காது" என நிஜாத் உறுதிப்படக் கூறினார்.

"பரஸ்பர மரியாதையுடனும், திறந்த மனதுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதை ஈரான் எப்பொழுதும் வரவேற்க தயாராக உள்ளது. ஆனால் அச்சுறுத்தலும், அடக்கி வைப்பதற்மான பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு ஈரான் ஒத்துழைக்காது" என நிஜாத் தெரிவித்தார்.

அணுசக்தி விவகாரத்தை காரணம் காண்பித்து அமெரிக்கா ஈரானுக்கெதிராக நான்காவது தடைக்கு தயாராகி வருகிறது என்ற செய்திக்கு பதிலளித்தார் நிஜாத்.

துருக்கியில் நடக்கும் ஆசிய பாதுகாப்புக் குழுவின் உச்சிமாநாட்டில் பங்கெடுப்பதற்காக இஸ்தான்புல் வந்திருந்தார் அவர். "அணுசக்தி எரிபொருள் துருக்கிக்கு பரிமாற்றம் செய்வதற்கான பிரேசிலின் மத்தியஸ்தத்தில் உருவான ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு கூட்டணி நாடுகளுக்கும் பிரச்சனையை தீர்ப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது,அதனை பயன்தரத்தக்க வகையில் உபயோகிக்க அவர்கள் முயற்சி எடுக்கவேண்டும்.

ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் தீர்மானத்தை ஈரான் பேணிவருகிறது". இவ்வாறு அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தடை என்றால் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை- அஹ்மத் நிஜாத்"

கருத்துரையிடுக