9 ஜூன், 2010

வாரன் ஆண்டர்ஸன்:விசாரணை தொடரும்-இந்தியா, வழக்கு முடிந்துவிட்டது- அமெரிக்கா

வாஷிங்டன்:ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் மரணத்திற்கும், தலைமுறைகளின் தீரா துயரத்திற்கும் காரணமான போபால் விஷவாயு விபத்து வழக்கின் முக்கிய குற்றவாளியும், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான வாரன் ஆண்டர்ஸனுக்கெதிரான வழக்கு முடித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆனால் விசாரணை முடிவடையவில்லை என்றும்,அவர் கைது செய்யப்பட்டால் வழக்கு நடவடிக்கைகள் தொடரும் எனவும் இந்தியா அறிவித்துள்ளது.

போபால் விஷவாயு விபத்து வழக்கில் இந்திய நீதிமன்றம் அளித்த தீர்ப்புடன் அவ்வழக்கு முடிந்துவிட்டதாகவும், புதிய விசாரணைகள் ஒன்றும் இல்லை என்றும் அமெரிக்காவின் அரசின் துணைச்செயலாளர் ரோபர்ட் ப்ளேக் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆசுவாசமாக இருக்கும் என்று கருதுவதாகவும் அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆண்டர்ஸனை ஒப்படைக்க இந்தியா கோரியதா? என்ற கேள்விக்கு தூதரக ரீதியான விஷயமானதால் இதுக்குறித்து கருத்துக்கூற முடியாது என்று அவர் பதிலளித்தார்.

அதேவேளையில் ஆண்டர்ஸனுக்கெதிரான வழக்கு விசாரணை தொடரும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

வழக்கு முடிந்துவிட்டதா என்பதுக் குறித்து சட்டரீதியாக எதனையும் கூற இயலாது. கைது செய்யப்பட்டால் விசாரணை தொடரும்.

போபால் வழக்கில் சி.பி.ஐ சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் ஆண்டர்ஸனின் பெயர் உள்ளது.நீதிமன்றம் இவருக்கெதிராக குற்றம் சுமத்தியிருந்தது. ஆண்டர்ஸன் தலைமறைவானதால் சட்டப்படி அவரை தலைமறைவுக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய குற்றவியல் சட்டம் 304(2) இன் படி சி.பி.ஐ இனப்படுகொலைக்கான வழக்கை பதிவுச் செய்தபொழுதும் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு அதனை தளர்த்தியிருந்தது,எனக்கூறிய வீரப்ப மொய்லியிடம் யூனியன் கார்பைடு முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்ஸனை ஒப்படைக்க இந்தியா எப்பொழுதாவது அமெரிக்காவிடம் கோரியதா? என்ற கேள்விக்கு பதிலளிக்க மொய்லி தயாராக இல்லை.

இதற்கிடையே இந்தியா பாராளுமன்றத்தின் மேற்பார்வையிலிலுள்ள அணுசக்தித் தொடர்பான மசோதா நிறைவேற்றுவது உள்ளிட்ட இருநாடுகளுக்கிடையேயான தூதரக உறவில் போபால் நீதிமன்ற தீர்ப்பு பாதிப்பை ஏற்படுத்தாது என அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.கிரவுலி தெரிவித்தார்.

மெக்ஸிக்கோ ஆழ்கடலில் எண்ணை கசிந்ததற்கு பிரிட்டீஷ் பெட்ரோலியத்திடம் நஷ்ட ஈட்டை கோரிய ஒபாமா அரசு போபால் துயர சம்பவத்திற்கு நஷ்ட ஈடு அளிக்க டோ கெமிக்கல்ஸிற்கு உத்தரவிடுமா என்ற கேள்விக்கு க்ரவுலி பதில் அளிக்கவில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வாரன் ஆண்டர்ஸன்:விசாரணை தொடரும்-இந்தியா, வழக்கு முடிந்துவிட்டது- அமெரிக்கா"

கருத்துரையிடுக