6 ஜூன், 2010

மனித உரிமை ஆணையத்தின் அதிகார எல்லையை கஷ்மீர் வரை நீட்டிக்கவேண்டும்: கே.ஜி.பாலகிருஷ்ணன்

புதுடெல்லி:தேசிய மனித உரிமை ஆணையத்தின் அதிகார எல்லையை ஜம்மு-கஷ்மீர் வரை நீட்டிக்க வேண்டுமென்று முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியும், தேசிய மனித உரிமை கமிஷனின் தலைவராக பொறுப்பேற்கவிருக்கும் கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கஷ்மீரில் தேசிய மனித உரிமை கமிஷனுக்கு முழுமையான அதிகாரம் தேவை. இதனைக் குறித்து அரசிடம் பேசவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜம்மு-கஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், ராணுவ ஆதிக்கம் உடைய நக்ஸல் பிரதேசங்கள் ஆகியவற்றில்தான் அதிக அளவிலான மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன.

ஒரு பிரதேசத்தில் பலத்தை பிரயோகிப்பது எப்பொழுதும் பலன் தராது என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

1990 ஆம் ஆண்டுமுதல் ராணுவத்தினரிடமிருந்தும், போராளிகள் என அழைக்கப்படுவோரிடமிருந்தும் மனித உரிமை மீறல்கள் வலுவடைந்துள்ளது. ஆனால் 1993 ஆம் ஆண்டு மனித உரிமை பாதுகாப்பு சட்டப்படி மனித உரிமை கமிஷனின் அதிகார எல்லையில் கஷீமீரை உட்படுத்தவில்லை. ஆகவே மனித உரிமை ஆணையத்தின் அதிகார எல்லையை கஷ்மீரை உட்படுத்தவேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மனித உரிமை ஆணையத்தின் அதிகார எல்லையை கஷ்மீர் வரை நீட்டிக்கவேண்டும்: கே.ஜி.பாலகிருஷ்ணன்"

கருத்துரையிடுக