6 ஜூன், 2010

காணாமல்போன பர்ஸ் திரும்ப கிடைத்தது 69 ஆண்டுகளுக்கு பிறகு

வாஷிங்டன்:உரிமையாளரை தேடி அலைந்த பர்ஸ் இறுதியில் 69 ஆண்டுகளுக்குப் பிறகு உரிமையாளரிடம் தஞ்சமடைந்தது.

ரோபர்ட் பெல் என்பவர்தான் இந்த அதிர்ஷ்டசாலி. இரண்டாம் உலகப்போரில் கலந்துக் கொண்ட அமெரிக்காவைச் சார்ந்த ராணுவ வீரரான பெல்லுக்கு கடந்த 69 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன பர்ஸ் தான் தற்பொழுது கிடைத்துள்ளது.

1941 ஆம் ஆண்டு சிகாகோ வொக்கேஷனல் ஸ்கூலில் ஹைட்ராலிக் ரிப்பேர் பயிற்சிக்குச் சென்ற பொழுதுதான் பெல்லிற்கு பர்ஸ் தொலைந்து போனது.

கப்பல் படை வீரனுடைய யூனிஃபார்மில் பெல்லும் அவருடைய காதலியும் போஸ் கொடுக்கும் புகைப்படமும், அவருடைய சமூக பாதுகாப்பு அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் அதில் இருந்தன.

1966 ஆம் ஆண்டே பெல்லின் பர்ஸ் போப் ஜோர்டான் என்பவருக்கு கிடைத்தது. ஆனால் உரிமையாளரை கண்டறிவதற்காக ஜோர்டான் நடத்திய முயற்சிகள் வீணானது.

கடந்த ஆண்டு ஜோர்டான் பத்திரிகையாளர் ஜோஸஃப் க்ரைக்கிற்கு இந்த பர்ஸை ஒப்படைத்தார். சமூக பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் க்ரைக் இறுதியில் உரிமையாளரை கண்டுபிடித்தார்.

பர்ஸ் திரும்பக் கிடைத்ததை பெல்லால் நம்ப இயலவில்லை. பின்னர் அதனை தனது மகனிடம் பர்ஸில் உள்ள புகைப்படங்களை காட்டி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காணாமல்போன பர்ஸ் திரும்ப கிடைத்தது 69 ஆண்டுகளுக்கு பிறகு"

கருத்துரையிடுக