ஈராக் குர்திஷ் தொழிலாளர்கள் கட்சி பி.கே.கேவை அங்காரவிற்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளுடன் இஸ்ரேல் ஆயுத பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக துருக்கி ‘Think-Tank’ டைரக்டர் தெரவித்துள்ளார்.௦௦௦௦௦
ஐ.எஸ்.ஆர்.ஒ (International Strategic Research Organization) தலைவர் சேதத் லசிநேர், சமான் என்ற துருக்கி ஆங்கில பத்த்ரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளதாவது: 'இஸ்ரேலின் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும், அதன் புலனாய்வு அமைப்பான மொசாதின் அதிகாரிகளும் இணைந்து, ஈராக் பி.கே.கே கட்சியினரை பயிற்சித்து வருவதை தான் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பி.கே.கே ஈராக்கில் செயப்படும் இஸ்ரேலிய தொழிலாளிகள் என்றும் அவர் தெரிவித்தார். பின்னர், இத்தீவிரவாதிகள் இஸ்ரேலிற்கு உளவு பார்ப்பதாகவும், முக்கியமான நகரங்களில் ஊடுருவது எப்படி? போன்ற பல பயிற்சிகள் இவர்களுக்கு அள்ளிக்கப்படுவதாகவும் லசிநேர் விவரித்தார்.
துருக்கியில் நடந்து வரும் தய்யிப் எர்டோகனின் ஆட்சியை இஸ்ரேல் விரும்பவில்லை என்றும் அதனால்தான் துருக்கிக்கெதிராக பல பொய் பிரச்சாரங்களில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பி.ஜே.ஏ.கே. என்ற மற்றொரு அமைப்பை பயன்டுத்தி இப்பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகளை இஸ்ரேல் குர்திஷ்தானிற்கு உற்பத்தி செய்கின்றது என்றும் இவர்கள் தான் ஈரானின் தலைவர்களுக்கும், மக்களுக்கும் எதிராக பல மர்ம தாக்குதல்களை மேற்கொண்டதாக லசிநேர் மேலும் விவரித்தார்.
1984லிருந்து இதுவரை இவர்கள் அங்காராவில் நடத்திய தாக்குதல்களில் சுமார் 40,000திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளார்கள்.
கடந்த, மே 31 அன்று துருக்கிய படைவீரர்களின் வாகனத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் ஏழு படைவீரர்கள் பலியாகினர். இதை இஸ்ரேலின் ஆதரவில் இயங்கும் குர்திஷ் தீவிரவாதிகள் தான் செய்துள்ளதாக துருக்கி நம்புகிறது.
ஈராக்,துருக்கி,ஈரான் என பலநாடுகளில் பல கட்சியின் பெயரில் இஸ்ரேலின் கையாட்கள் செயல்பட்டு வருகின்றனர்.
source:twocircles.net
0 கருத்துகள்: on "ஈராக்கில் தீவிரவாதிகளை பயிற்சிவிக்கும் இஸ்ரேல்"
கருத்துரையிடுக