17 ஜூன், 2010

புதிய அணு உலை தொடங்கப்படும்:ஈரான்

டெஹ்ரான்:ரேடியோ ஐசோடோப் என்ற கதிர்வீச்சுப் பொருளை தயாரிப்பதற்காக புதிய அணு உலை ஒன்று கட்டப்படப் போவதாக அணு விஞ்ஞானத் தலைவர் அலி அக்பர் ஸாலஹி கூறினார்.

டெஹ்ரானில் இப்பொழுதுள்ள வசதிகளைக் காட்டிலும் இந்த அணு உலை மிக்க ஆற்றல் உள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இப்பொழுது நிலவிலுள்ள டெஹ்ரான் ஆராய்ச்சி மையத்திற்காக முதற்கட்ட எரிபொருள் செப்டம்பர் 2011ல் தயாராகி விடும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்தப் புதிய திட்டம் பெரும்பாலும் 5 வருடங்களை எடுத்துக்கொள்ளும். அதற்கான இடம் இன்னும் இறுதிப் படுத்தப்படவில்லை. அது 20 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்" என்று அவர் கூறினார்.

இந்தச் செய்தியை ஈரான் செய்தி நிறுவனமான ISNA கூறியுள்ளது.

source:7days


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "புதிய அணு உலை தொடங்கப்படும்:ஈரான்"

கருத்துரையிடுக