2 ஜூன், 2010

முஸ்லிம்கள் சிறைகளில் வாடுவது அதன் தலைவர்களாலேயே- தீவிரவாதி என முத்திரைக்குத்தப்பட்ட அப்பாவி சபாஹுத்தீன்

மும்பை:26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் தீவிரவாதி என்று கைது செய்யப்பட்டு பின்னர் உயர் நீதிமன்றத்தால் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட சபாஹுத்தீன் அஹ்மத், கடந்த 25ம் தேதி ஜாமியத் உலமாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

உருது மொழியில் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது; 'ஆதிக்க சக்திகளுக்கு அப்பாற்பட்டு அப்பாவி முஸ்லீம்கள் இன்று சிறைகளில் வாடுவதற்கு முஸ்லீம் தலைவர்களே முக்கியமான காரணம்' என்று கூறியுள்ளார்.

அதில் மேலும் கூறப்படுள்ளதாவது;"நான் மும்பை கொண்டுவரப்பட்டு இன்றோடு 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. என்னை போல் நூற்றிற்கும் மேற்பட்ட அப்பாவிகளுடன் இன்று நான் சிறையில் வாழுகின்றேன். அவர்களும் தங்கள் வழக்கு விசாரணையும் ஒரு நாள் ஆரம்பிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்கின்றனர். நீதிமன்றத்தில் தங்களுக்காக வாதாட ஒரு வக்கீல் வரமாட்டாரா? நாங்களும் அப்பாவிகளாக நிருபிக்கப்படமாட்டோமா? என்ற ஏக்கத்தில் அவர்கள் காத்திருக்கின்றனர்.

இவ்வளவு துன்பங்களுக்கும்,மோசமான நிலைமைகளுக்கும் பதவி மற்றும் உரிமைகள் இருந்தும், தங்கள் சமூகத்தை கண்டுக்கொள்ளாத முஸ்லிம் தலைவர்களே காரணம்!

நான் கைது செய்யப்படுவதற்கு முன்,அரசியலில் அக்கறையே காட்டியதில்லை. ஆனால், ஆர்தூர் ரோடு ஜெயிலில் வருடக்கணக்காக அடைக்கப்பட்டது, என்னை அரசியலை பற்றி சிந்திக்க வைத்துள்ளது.

எங்களை போன்ற அப்பாவி முஸ்லிம்கள் பொய்யான வழக்குகளில் ஜோடிக்கப்படுவதை செய்திகளில் நான் படிப்பதுண்டு.ஆனால் எங்களைப் போன்றவர்களுக்காக அவர்கள்(தலைவர்கள்) என்ன உதவி செய்துள்ளார்கள்?

இந்த தலைவர்களும்,அறிஞர்களும் சிறிதளவாவது சமூகத்தின் மேல் அக்கறை கொண்டிருந்தால்,இது போன்ற சதி வேலைகளை தடுத்திருக்கலாம்.

கைது செயப்பட்டவர்களுக்கு ஒருவரும் முன்வந்து வாதிடாததே, இன்று முஸ்லீம்கள் பலிகடாகளாக ஆகப்படுவதற்கு காரணம்!

26/11 வழக்கில் நானும்,ஃபஹிம் அன்சாரியும் ஆதாரமே இல்லாமல் எப்படி பொய் வழக்குகளில் ஜோடிக்கபபட்டோம் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

என்னையும்,ஃபஹிமைப்போல் அதிஷ்டவசமாக எத்தனை பேர் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனரோ? என்று சில சமயங்களில் நான் யோசித்தது உண்டு" என்று அந்த கடிதத்தில் தன் கஷ்டங்களை கூறியுள்ளார் சபாஹுத்தீன்.

26/11 வழக்கிலிருந்து சபாஹுத்தீன் மற்றும் ஃபஹிம் அன்சாரி விடுவிக்கப்பட்டாலும், யு.பியில் நிலுவையில் உள்ள மற்றொரு வழக்கில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

மற்ற வழக்குகளில் தனக்கு சட்ட உதவிகள் அளிக்கும் படியும் ஜாமியத்திற்கு சபாஹுத்தீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
source:Siasat

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முஸ்லிம்கள் சிறைகளில் வாடுவது அதன் தலைவர்களாலேயே- தீவிரவாதி என முத்திரைக்குத்தப்பட்ட அப்பாவி சபாஹுத்தீன்"

கருத்துரையிடுக