1 ஜூன், 2010

ஷோபியான் பேரணி:போலீஸ் தடை- கிலானி கைது

ஸ்ரீநகர்:ஷோபியானுக்கு பேரணி நடத்தவிருந்த ஹுரியத் தலைவர்களின் முயற்சியை போலீஸ் தடைச் செய்தது.

ஹுரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானியை கைது செய்து சிறையிலடைத்தது போலீஸ். கிலானி கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஹும்ஹாமா போலீஸ் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டிருந்தார்.

இதற்கிடையே மீர்வாய்ஸ் ஃபாரூக்கின் வீட்டுக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கிலானி தலைமையிலான ஷோபியானை நோக்கி நடத்தவிருந்த பேரணி அமைதியை கெடுக்கும் என்பதால்தான் இந்த கைது நடவடிக்கை என போலீஸ் கூறுகிறது.

ஹுரியத் நடத்தவிருந்த பேரணிக்கு இதர அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. சோனியா காந்தியின் ஜம்மு வருகைக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த மீர்வாய்ஸ் ஃபாரூக் உள்ளிட்ட தலைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வீட்டுக்காவலில் உள்ளனர்.

ஆனால் ஆஸியா அந்த்ராபியின் தலைமையிலான பெண்கள் அமைப்பு துக்தரானே மில்லத் உறுப்பினர்கள் ஷோபியானுக்குச் சென்று கண்டனக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஷோபியானில் இரண்டு முஸ்லிம் இளம்பெண்களை கொடூரமாக வன்புணர்வுச்செய்து கொன்ற நிகழ்வின் ஓராண்டு முடிவடைந்த தினம்தான் நேற்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஷோபியான் பேரணி:போலீஸ் தடை- கிலானி கைது"

கருத்துரையிடுக