தாக்குதலுக்கு பிறகு இவரைக் குறித்து தகவல் கிடைக்கவில்லை எனவும், யு.ஏ.இ நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில்தான் கடைசியாக அவர் தங்களுடன் தொடர்புக் கொண்டார் எனவும் கல்ஃப் நியூஸின் எடிட்டர் அப்துல் ஹமீத் அஹ்மத் தெரிவித்துள்ளார்.
இவர் உட்பட எல்லா பத்திரிகையாளர்கள், சமாதான பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிச்செய்வது இஸ்ரேல் அரசின் கடமை என அவர் தெரிவித்தார்.
கல்ஃப் நியூஸ் பிரதிநிதி உள்ளிட்ட நிவாரண கப்பலின் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலின் நடவடிக்கைக் குறித்து சர்வதேச பத்திரிகையாளர்கள் சங்கம் விசாரணை நடத்தவேண்டும் என்று யு.ஏ.இ பத்திரிகையாளர்கள் சங்கம் கோரியுள்ளது.
பத்திரிகையாளர்களையும்,சாதாரண குடிமக்களையும் தாக்கும் நடவடிக்கையில் விசாரணை நடத்துவதற்கு பல்வேறு சர்வதேச அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக யு.ஏ.இ பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் முஹம்மது யூசுஃப் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிவாரண கப்பலில் கல்ஃப் நியூஸ் ரிப்போர்டர்"
கருத்துரையிடுக