லண்டன்:ஐரோப்பியர் அல்லாதவர்களும், இந்தியர்களும் இனி பிரிட்டனில் திருமணம் செய்ய நாடினால் அவர்கள் ஆங்கில தேர்வில் வெற்றிப் பெற்றிருக்க வேண்டும்.
டேவிட் காமரூன் தலைமையிலான அரசு இந்த ஆங்கில தேர்வு கட்டாயம் என்பதற்கான சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் முதல் ஆங்கில தேர்வில் வெற்றிப் பெற்றால் மட்டுமே விசா அனுமதிக்கப்படும்.இந்தச்சட்டம் திருமணமாகாத ஜோடிகளுக்கும், தனிநபர் தொடர்பு வைத்திருக்கக் கூடியவர்களுக்கும் நிர்பந்தமாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து ஜோடியாக வரக்கூடியவர்கள் விசா மனுவுடன் தேர்வில் வெற்றிப் பெற்ற ஆவணங்களும் இருந்தால் மட்டுமே பிரிட்டன் பார்டர் ஏஜன்சி விசாவை அனுமதிக்கும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பிரிட்டனில் குடியேற இனி ஆங்கில தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்"
கருத்துரையிடுக