காந்தஹார்:ஆக்கிரமிப்பு நேட்டோ ராணுவத்தின் போர் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய தாலிபான் போராளிகள் நான்கு அமெரிக்க வீரர்களை கொன்றனர்.
தெற்கு ஆப்கான் மாகாணமான ஹெல்மந்தில் ஸாங்கிள் நகரில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தெற்கு ஆப்கான் மாகாணமான ஹெல்மந்தில் ஸாங்கிள் நகரில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேட்டோ செய்தித் தொடர்பாளர் லெஃப்.கர்னல் ஜோஸஃப் ப்ரஸ்ஸில் இத்தகவலை உறுதிச்செய்துள்ளார்.
அமெரிக்காவின் ஷினோக் ஹெலிகாப்டரை இரண்டு ராக்கெட்டுகளை பயன்படுத்தி தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும், இத்தாக்குதலில் 20 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் எனவும் தாலிபான் செய்தித் தொடர்பாளர் காரி யூசுஃப் அஹ்மதி அறிவித்துள்ளார்.
இன்னொரு தாக்குதல் சம்பவத்தில் நேற்று மேலும் ஒரு நேட்டோ ராணுவ வீரன் கொல்லப்பட்டார். இவ்வருடம் இறுதியில் தாலிபானுக்கெதிரான போரில் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறிய அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ராபர்ட் கேட்ஸின் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இத்தாக்குதல் நடந்துள்ளது.
இந்த ஆண்டு 253 நேட்டோ ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 150க்கும் மேற்பட்டோர் அமெரிக்க ராணுவத்தினர் ஆவர்.
அமெரிக்காவின் தலைமையில் 2001 ஆம் ஆண்டு நடந்த ஆக்கிரமிப்பிற்கு பிறகு 1800க்கும் மேற்பட்ட நேட்டோ ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "நேட்டோ விமானத்தை வீழ்த்தியது தாலிபான்: நான்கு அமெரிக்க ராணுவத்தினர் பலி"
கருத்துரையிடுக