ஐ.நா:அணுசக்தித் திட்டத்தின் பெயரால் ஈரானுக்கெதிராக நான்காவது தடை விதிப்பதற்கான தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியது.
தடை தீர்மானத்தை 12 நாடுகள் ஆதரித்தபொழுது பிரேசிலும், துருக்கியும் எதிர்த்தன. லெபனான் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை.
பொருளாதார தடையோ எண்ணெய் ஏற்றுமதிக்கு தடையோ அல்ல. மாறாக கூடுதலான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்த தடை பொருந்தும்.
அணுஆயுதங்கள் ஏந்திச் செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிப்பதை நிறுத்துதல், ஆயுதம் கொள்முதல் செய்வதற்கான தடை, சுரங்க முதலீட்டில் தடை, இதற்கான நிதியுதவி அளிக்கும் வங்கிகளுக்கு லைசன்ஸ் ரத்துச்செய்தல் ஆகியன் இந்த தடைக்கான தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளன.
ஈரானுக்கெதிரான தடை ஏற்படுத்துவதற்கான அமெரிக்காவின் நிர்பந்தத்தை ஐ.நா கூட்டத்தில் இதர நாடுகளும் அங்கீகரித்துள்ளன. ரஷ்யாவையும், சீனாவையும் ரகசியமாக நடத்திய கூட்டத்தில் வைத்து அமெரிக்கா மனம் மாறச்செய்ததாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் ஏற்கனவே இந்தத் தீர்மானத்தின் மீது புரிந்துணர்வுக் கொண்டிருந்தன.
ஈரான் மீது ஐ.நா ஏற்படுத்தும் நான்காவது தடையாகும் இது.
தடை தீர்மானம்:குப்பைத்தொட்டியில் வீசக்கூடியது
இந்நிலையில் இத்தீர்மானத்தைக் குறித்து கருத்துத் தெரிவித்த ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத்; "நான் உலக வல்லரசுகளில் ஒன்றிற்கு ஒரு செய்தியைக் கூறிக்கொள்கிறேன், இத்தீர்மானம் உபயோகப்படுத்தப்பட்ட கைக்குட்டையை குப்பைத் தொட்டியில் வீசுவதற்கு சமமானது.
இத்தீர்மானம் ஈரானைப் பொறுத்தவரை அமெரிக்க சில்லறை நாணயமான டைமுக்குக்கூட சமமானது அல்ல. ஈரானியர்களை இத்தீர்மானம் காயப்படுத்த தகுதியானது அல்ல." என்றார் அவர்.
துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுக்குறித்துக் கூறுகையில்; "ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் கவலையை அளிக்கிறது. இத்தீர்மானம் ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான ராஜதந்திர நடவடிக்கைகளுக்கும், அமைதி தீர்வுக்கும் ஊறு விளைவிக்கும்" என்றது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ், bangkokpost
0 கருத்துகள்: on "ஈரானுக்கெதிராக ஐ.நா வின் நான்காவது தடை. தீர்மானம் குப்பைத் தொட்டியில் வீசக்கூடியது- அஹ்மத் நிஜாத்"
கருத்துரையிடுக