அணுவிபத்து நஷ்டஈடை 500 கோடி ரூபாய்க்கு மேல் அதிகரிக்கும் விதத்தில் அணுவிபத்து நஷ்டஈடு மசோதாவில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மீதான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்த கருத்துகள் இதை உணர்த்தும் வகையில் இருந்தது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அணுசக்தி துறை மற்றும் இந்திய அணுசக்தி துறைகளின் உயர் அதிகாரிகள்,அணுவிபத்து நஷ்டஈடு மசோதாவை தற்போதைய வடிவில் நிறைவேற்றினால் ஏற்படும் பாதகங்கள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்தனர்.
இந்த அறிக்கை மீது நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்கள் விரிவான ஆலோசனை நடத்தினர். விவாதத்தின் போது அனைத்து உறுப்பினர்களுமே அணுவிபத்து நஷ்டஈடு மசோதாவின் தற்போதைய வடிவம் குறித்து அதிருப்தி தெரிவித்தனர். நஷ்டஈடை அதிகரிக்கும் விதத்தில் மசோதாவை திருத்துவது அவசியம் என்றும் கூறினர்.
போபால் விஷவாயு சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்பை பார்க்கும் போது நஷ்டஈடு 500 கோடி ரூபாய் என்பது போதுமானதல்ல என்பது தெளிவாகிறது என்றும் நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
அணுவிபத்து நஷ்டஈடு மசோதாவில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மீதான நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை அளித்தால் அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: on "அணுவிபத்து நஷ்டஈடை 500 கோடி ரூபாய்க்கு மேல் அதிகரிக்கும் விதத்தில் மசோதாவில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்?"
கருத்துரையிடுக