21 ஜூன், 2010

அப்சல் கருணை மனு:இப்போது பாதுகாப்பு அமைச்சகத்தில்

மும்பை:டெல்லி பாராளுமன்றத்தை தாக்கியதாக குற்றம் சாட்டபட்டு அநியாயமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, அப்சல் குருவின் கருணை மனு, தற்போது பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வந்தடைந்துள்ளது. இதை பாதுகாப்புத் துறையும் உறுதி செய்துள்ளது.

கடந்த 2006–ல் தாக்கல் செய்யப்பட்ட அப்சலின் மனு, நான்கு வருட டெல்லி அரசின் சோம்பலுக்குப் பிறகு தற்போது தான் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வந்துள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஆய்வுக்கு பிறகு இம்மனு ஜனாதிபதி அலுவகத்திற்கு தீர்ப்புக்காக அனுப்பப்படும்.

கடந்த 2001ல், அப்சலுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும், ஒட்டு மொத்த இந்திய நாட்டின் மனசாட்சிக்காக, அப்சலுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே!
DNA

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அப்சல் கருணை மனு:இப்போது பாதுகாப்பு அமைச்சகத்தில்"

கருத்துரையிடுக