2 ஜூன், 2010

அப்துஸ்ஸமத் பட்கல் விரைவில் விடுவிக்கப்படலாம்!

அப்துஸ்ஸமத் புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில் சந்தேகிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 13ம் தேதி துபையிலிருந்து மங்களூர் திரும்பும் போது, விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் பெரிய ஆதாரமாக கருதப்படுவது,ஜெர்மன் பேக்கரியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிந்திந்திருந்த ஒரு மர்மமான நபர்.

அவரைத் தான் ஸமதாக இருக்குமோ என்று ஏ.டி.எஸ். சந்தேகிக்கிறது.அப்துஸ்ஸமதிடம் இதுவரை மேற்கொண்ட விசாரணையில், தெளிவான ஆதாரம் என்று கூறும் அளவிற்கு ஏ.டி.எஸ்சிற்கு எதுவும் சிக்கவில்லை.

இது குறித்து,ஏ.டி.எஸ் தகவல்கள் தெரிவிப்பதாவது நாங்கள் அப்துஸ்ஸமத்திற்கு இவ்வழக்கில் தொடர்பிருக்கலாம் என்று தான் எண்ணினோம் ஆனால் சரியான ஆதாரம் இல்லாத காரணத்தினாலும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் அப்படி எதுவும் உறுதியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

சந்தேகிப்பர்களை எல்லாம் போலீஸ் காவலில் எடுக்கும் ஏ.டி.எஸ். அப்துஸ்ஸமத் விவகாரத்தில் அவரை போலீஸ் காவலில் எடுப்பதிலிருந்து இருந்து தவிர்த்ததற்கு ஆதாரமின்மையே காரணமாகும்.

இது குறித்து, முபீன் சோல்கர் (ஸமதின் வக்கீல்) கூறுகையில், 'அப்துஸ்ஸமதிற்கெதிராக மீடியாவின் சீரிய பிரசாரங்கள் இருந்தும், ஏ.டி.எஸ் அப்துஸ்ஸமதை புனே குண்டு வெடிப்பில் கைது செய்யாததை நான் பாராட்டுகின்றேன்' என்றார்.

ஏ.டி.எஸ். சமதை ஆயுதங்கள் வழக்கில் தான் கைது செய்துள்ளது.எங்கேயும் அப்துஸ்ஸமத் புனே குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக கூறப்படவில்லை' என்றார்.

எப்படி புனே குண்டுவெடிப்பில் ஸமத் பலிகடா ஆக்கப்பட்டார்:-
முன்பு சொன்னது போல ஏ.டி.எஸ்ஸிடம் இருந்தது அல்லது இருப்பது சி.சி.டி.வி கேமராவில் பதிந்த காட்சிகள் தான். குண்டுவெடிக்கும் தினத்தன்று சுமார் 400 மக்கள் ஜெர்மன் பேக்கரிக்கு வந்து சென்றுள்ளனர்.

இதை விசாரிக்கும் போது, சுமார் 398 மக்களை ஏ.டி.எஸ். அடையாளம் கண்டு பின்னர் விடுவித்தது.

ஆனால் அதில் இரண்டு நபர்கள் அடையாளம் காணப்படவில்லை.ஆகவே அவ்விருவரை கண்டுபிடிக்க உளவுத்துறையின் உதவியுடன் ஏ.டி.எஸ் களத்தில் குதித்தது.

அச்சமயத்தில் தான் பாசிஸ்டுகள் நிரம்பி வழியும் ஐ.பி எனப்படும் உளவுத்துறை தன் அதிகாரத்தை பயன்படுத்தி அப்துஸ்ஸமதை அந்த அடையாளம் காணப்படாத இரண்டு நபர்களின் பட்டியலில் சேர்த்தது.

சிதம்பர ரகசியம்:
புனே குண்டுவெடிப்பில் அடையாளம் காணப்படாமல் இருவர்கள் உள்ளனர் என்று பாதுகாப்புத் துறைக்கு ஏ.டி.எஸ் மாதம் மாதம் தங்கள் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில், உளவுத்துறையின் சதியை அறியாமல் (அதாவது அப்துஸ்ஸமதின் கைதை அறிந்ததும்) உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஏ.டி.எஸ்சை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

சிதம்பரத்தின் இவ்வறிக்கை ஏ.டி.எஸ் அதிகாரிகளை ஒரு பக்கம் சந்தோசத்தில் அழ்தினாலும் மறுபக்கம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஏ.டி.எஸ் அப்துஸ்ஸமதை புனே குண்டு வெடிப்பில் சந்தேகம் தான்பட்டது. ஆனால் ப.சிதம்பரமோ ஒருபடி மேலே சென்று, ஸமதிற்கெதிராக வழக்கு நிலுவையில் இருப்பது போன்று அறிக்கை விடுத்தார்.பின்னர் நேற்று இவ்வறிக்கையை மறுத்தார்.

ஏ.டி.எஸ். தரப்பு:
ஏ.டி.எஸ் தகவல்கள் தெரிவிக்கையில் ஸமதை குற்றவாளியாக உறுதிப்படுத்துவதற்கு,சரியான ஆதாரமோ ஆவணமோ அவர்களிடம் இல்லை.

ஆதாரத்தை பொறுத்தவரையில் ஸமத் சம்பவம் நடந்ததன்று பட்கல் என்ற இடத்தில் இருந்துள்ளார், புனேவில் அல்ல!

சில சந்தேகங்கள் இன்றும் உள்ளன. அதற்கு ஏற்றாற்போல் ஏ.டி.எஸ் ஆராய்ந்து, ஒரு வேலை சரியான ஆதாரங்கள் இல்லை என்றால் அப்துஸ்ஸமத் விடுவிக்கப்படுவார் என்று பெயர் குறிப்பிடாத ஏ.டி.எஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அப்துஸ்ஸமத் பட்கல் விரைவில் விடுவிக்கப்படலாம்!"

கருத்துரையிடுக