29 ஜூலை, 2010

ஈரானில் குழந்தைகளுக்கு 18 வயது வரை ஊக்குவிப்புத் தொகை வழங்க முடிவு

டெஹ்ரான்,ஜுலை29:தனது நாட்டின் மக்கள் தொகை அதிகரிப்பை ஊக்குவிக்கும் விதமாக இனிமேல் பிறக்கவுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் 18 வயதுவரை குறிப்பிட்டதொரு ஊக்குவிப்பு தொகையை வழங்கும் திட்டத்தை ஈரான் அதிபர் அஹமதி நிஜாத் நேற்று தொடங்கி வைத்தார்.

அத்திட்டத்தின் கீழ் இனிமேல் பிறக்கவுள்ள ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் வங்கிக்கணக்கொன்றை ஆரம்பித்து அப்பிள்ளையின் 18 வயது வரை பணம் டெபாசிட் செய்யப்படும். ஆரம்ப தொகையாக 950 அமெரிக்க டாலர்களும் பின்னர் வருடந்தோரும் 95 அமெரிக்க டாலர்களும் டெபாசிட் செய்யப்படும் எனவும் அஹமதி நிஜாத் தெரிவித்தார்.

மேலும் இச்சட்டத்தின்படி அப்பிள்ளை தனது 20 வது வயதில் வங்கி கணக்கிலுள்ள பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஈரானின் தற்போதைய மக்கள் தொகை 75 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈரானில் குழந்தைகளுக்கு 18 வயது வரை ஊக்குவிப்புத் தொகை வழங்க முடிவு"

கருத்துரையிடுக