
லெபனானின் கிழக்கு பகுதியில் உள்ள தாலியா என்ற நகரில் மான்ஃப்ரெட் பீட்டர் மோக் என்பவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். லிபான் லேட் பால் பண்ணையில் வேலை செய்து வந்த இவர், லெபனானில் உளவு பார்த்த செயலுக்காக கைதுசெய்யப்பட்ட முதல் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லெபனான் பாதுகாப்பு படையினர் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர்கள் உள்பட பலபேர் கடந்த ஒரு ஆண்டுகாலமாக மொஸாத்துடன் இணைந்து செயல்படுவதாக சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டு வந்தனர். இதன் விளைவாகவே இவர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக நாடு முழுவதும் இஸ்ரேலிய உளவு அமைப்பின் வேலையை தகர்த்தெரியும் முயற்சியில், அதன் தேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஆல்ஃபாவின் ஊழியர்கள் மூவரை காவலில் வைத்து விசாரித்தது.
கடந்தவாரம்,லெபனானில் உளவு வளையங்களை ஏற்படுத்தியதற்காக இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புகார் மனு கொடுக்க லெபனான் அமைச்சரவை ஏகமனதாக முடிவெடுத்துள்ளது.
0 கருத்துகள்: on "பெய்ரூட்டில் மொஸாதுக்காக உளவுப் பார்த்த ஜெர்மனிய உளவாளி கைது"
கருத்துரையிடுக