ஸ்ரீநகர் கஷ்மீரின் கோடைகாலத் தலைநகர் ஸ்ரீநகரில் மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாகவும், பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள் ரத்து செய்யப்பட்டதாலும் 2 நாட்களுக்கு அங்கு எந்த பத்திரிக்கையும் வெளிவரவில்லை.
டெல்லியில் இருந்து அழைத்துவரப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு,அங்கு நடக்கும் கலவரத்தையும்,நிலையையும் காண அனுமதிக்கும் அரசு, கஷ்மீரிலுள்ள பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அடையாள அட்டைகளை ரத்து செய்ததை தேச மற்றும் சர்வதேச ஊடக அமைப்புகள் கண்டனம் செய்துள்ளன.
கஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று கூடிய கஷ்மீர் செய்தியாளர்கள் சங்கத்தின் குலாம் ஹசன் கலூ, கஷ்மீர் பிரஸ் கில்ட் அமைப்பின் பஷீர் அகமது, கஷ்மீர் பத்திரிக்கையாளர் படையின் தலைவர் இஸ்ஃபாகுல் ஹாசன், கஷ்மீர் புகைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் பரூக் ஜாவேத், வீடியோ பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தாரிக் ஆகியோர் அரசின் கட்டுப்பாட்டை கடுமையாக கண்டித்துள்ளனர்.

0 கருத்துகள்: on "ஸ்ரீநகர்:ஊரடங்கு மற்றும் ஊடக கட்டுப்பாட்டால் 2 நாட்களாக பத்திரிக்கைகள் வெளிவரவில்லை!"
கருத்துரையிடுக