ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரை சேர்ந்தவர் ஜான் டென்காம் (67). இவர் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியாராக பணி புரிந்தார். கடந்த 1986-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை நியூசவுத் வேல்ஸ் மற்றும் சிட்னி நகர கிறிஸ்தவ பள்ளிகளில் பணி புரிந்தார்.
அப்போது அங்கு படித்த 5வயது முதல் 16 வயது வரையிலான சிறுவர்களுக்கு பாலியல் கொடுமை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இதன் மூலம் 25 சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர். எனவே இவரை சிட்னி போலீசார் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஹெலன் சிமி குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார் ஜான்டென் காமுக்கு 19 ஆண்டுகள் மற்றும் 10 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். விசாரணையின் போது பாதிரியார் ஜான் டென்காம் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டார். அதற்காக மன்னிப்பும் கேட்டு கொண்டார்.
0 கருத்துகள்: on "பாலியல் குற்றச்சாட்டு: ஆஸ்திரேலிய பாதிரியாருக்கு 20 ஆண்டு ஜெயில்"
கருத்துரையிடுக