ஆஃப்கனில் அமெரிக்க நிறுவனம் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
ஆஃப்கனில் உள்ள குண்டுஸ் மாகாணத்தில் வாஷிங்டனை சேர்ந்த தனியார் ஆலோசனை நிறுவனம், அமெரிக்க அமைப்பின் ஒப்பந்தத்தைப் பெற்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த நிறுவனம் அமைந்துள்ள கட்டடம் மீது தலிபான்கள் 6 பேர் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
அதிகாலை 3.30 மணி அளவில் முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் வந்த தலிபான், கட்டடத்தின் வாயிலில் காரை வெடிக்கச் செய்தார். இதில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
இதை அடுத்து, மேலும் 5 தலிபான்கள் அந்தக் கட்டடம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஆஃப்கன் போலீஸ் ஒருவரும், ஜெர்மனி மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டவர் இருவரும் உயிரிழந்தனர்.
தாக்குதல் சம்பவம் நடந்த இடத்திலிருந்து 5 தலிபான்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலை நிகழ்த்தியது எங்கள் அமைப்பினர் தான் என தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்: on "ஆஃப்கனில் அமெரிக்க நிறுவனம் மீது தலிபான்கள் தாக்குதல்: 4 பேர் பலி"
கருத்துரையிடுக