கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் நின்று கொண்டிருந்த ஒரு ரயிலின் மீது மற்றொரு ரயில் மோதியதால் 60 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 
சைந்தியா என்ற ரயில் நிலையத்தில் இந்த பயங்கர விபத்து நேர்ந்தது. இன்று அதிகாலை 2.15 மணியளவில் ரயில் நிலையத்தின் 4வது பிளாட்பாரத்தில் புறப்படத் தயாராக பாகல்பூர்-ராஞ்சி வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த நியூ கூச்பிகார்-சியால்தா உத்தரபங்கா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் 60 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆனால் உயிர்ப்பலி அதிகரிக்கும் எனத் தெரிகிறது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்றது.
காயமடைந்தவர்கள் பிர்பும் நகரில் உள்ள சூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. சம்பவ இடத்திற்கு ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி விரைந்துள்ளார்.

சைந்தியா என்ற ரயில் நிலையத்தில் இந்த பயங்கர விபத்து நேர்ந்தது. இன்று அதிகாலை 2.15 மணியளவில் ரயில் நிலையத்தின் 4வது பிளாட்பாரத்தில் புறப்படத் தயாராக பாகல்பூர்-ராஞ்சி வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த நியூ கூச்பிகார்-சியால்தா உத்தரபங்கா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக மோதியது.இந்த கோர விபத்தில் 60 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆனால் உயிர்ப்பலி அதிகரிக்கும் எனத் தெரிகிறது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்றது.
காயமடைந்தவர்கள் பிர்பும் நகரில் உள்ள சூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. சம்பவ இடத்திற்கு ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி விரைந்துள்ளார்.

0 கருத்துகள்: on "மேற்கு வங்கத்தில் ரயில்கள் மோதல்- 60 பேர் பலி 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம்"
கருத்துரையிடுக