19 ஜூலை, 2010

இணையதளத்தில் புதிய இலவச தமிழ் அகராதி: அண்ணா பல்கலைகழக ஆசிரியர்களின் உருவாக்கம்

சென்னை:தமிழ் மக்களின் பயன்பாட்டிற்காக இணையதளத்தில் இலவச தமிழ் அகராதியை உருவாக்கியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். அண்ணா பல்கலைக்கழக ஆசிரியரும், கவிஞர் வைரமுத்துவின் மகனுமான மதன் கார்க்கி, ஆசிரியர்கள் கீதா, ஷோபா, ரஞ்சனி ஆகியோரும் சேர்ந்து இணையதளத்தில் இலவச தமிழ் அகராதியை உருவாக்கியுள்ளனர். இதன் முகவரி www.agaraadhi.com

ஏற்கனவே, இணையதளத்தில் பல தமிழ் அகராதிகள் இருக்கின்றன. ஆனால், அவை அளித்திடாத 20 சேவைகளை இந்த புதிய அகராதி அளிக்கிறது. தமிழ்ச் சொல் உருவாக்கம், பிழைத்திருத்தம், மாற்றுச் சொற்கள், சொற்கள் பயன்பாடு, திருக்குறள் பயன்பாடு, பாரதியார் மற்றும் ஔவையார் பாடல்களில் உள்ள சொற்களின் பயன்பாடு உள்ளிட்ட பல பயன்பாடுகள் இதில் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த அகராதி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்த் திரைப்படப் பாடல்களின் வரிகளையும் இதனுடன் இணைத்துள்ளது வித்தியாசமாக உள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இணையதளத்தில் புதிய இலவச தமிழ் அகராதி: அண்ணா பல்கலைகழக ஆசிரியர்களின் உருவாக்கம்"

கருத்துரையிடுக