19 ஜூலை, 2010

ஆசிய சுற்றுலா மையங்களில் தாஜ்மகாலுக்கு முதலிடம்

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்கு, ஆசியாவின் சிறந்த சுற்றுலா மையங்களில் முதலிடம் கிடைத்துள்ளது.

டெல்லி அருகே ஆக்ராவில் உள்ளது தாஜ்மகால். காதல் மனைவி மும்தாஜ் நினைவாக ஷாஜகான் கட்டி அழகு பார்த்த அந்த பளிங்கு கட்டிடம், உலகம் முழுவதும் புகழ்பெற்றது. உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்நிலையில், சர்வதேச பொழுதுபோக்கு பூங்கா மற்றும் மையங்கள் என்ற பெயரில் ஆசியாவின் சிறந்த மையங்களில் அதிக வரவேற்பை பெற்றது எது என ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ந்தெடுக்கப்படும் மையங்களுக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற உள்ள ஆசிய சிறந்த மையங்கள் கண்காட்சி 2010 விருது அளிக்கப்பட உள்ளது.

இதற்கான ஆய்வில் 94,099 பேர் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். வெப்சைட் மற்றும் முக்கிய இடங்களில் அஞ்சல் பெட்டி வைத்து கருத்துகள் சேகரிக்கப்பட்டன. அதன் முடிவுகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி,ஆசியாவின் மிகச் சிறந்த சுற்றுலா மையம் என்ற பெருமையை தாஜ்மகால் பெற்றது.அடுத்த இடங்களை முறையே சிங்கப்பூரின் ரிசார்ட் வேர்ல்ட் சென்டோசா,மலேசியாவின் சன்வே லாகூன்,சிங்கப்பூரின் சென்டோசா 4டி மேஜிக்ஸ்,மலேசியாவின் சன்வே வாட்டர் பார்க், சிங்கப்பூரின் வனவிலங்கு பூங்கா, ஜப்பானின் யுனிவர்சல் ஸ்டூடியோ ஆகியவை பிடித்தன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆசிய சுற்றுலா மையங்களில் தாஜ்மகாலுக்கு முதலிடம்"

கருத்துரையிடுக