
கிழக்கு ஆஃப்கானில் குண்டுவெடிப்புகளில் சிக்கி 2 வீரர்களும், தாலிபான்களின் நேரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் 4 வீரர்கள் என நேற்று மட்டும் சுமார் 6 அமெரிக்க படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
மற்றொரு சம்பவத்தில்,அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 11 பாகிஸ்தானிய ஷியா மக்கள் உயிரிழந்தனர்.
இது போக,சாலை ஓரங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததில் 2 ஜெர்மன்படை வீரர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாலிபான் தாக்குதல்களை சமாளிக்க முடியாத அமெரிக்கா,மேலும் 30,000 அமெரிக்க படைகளை ஆஃப்கான் கொண்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் மட்டும் சுமார் 103 வெளிநாட்டுப் படைவீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: on "ஆஃப்கான்:தாலிபான்களின் பரவலான தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் பலி"
கருத்துரையிடுக