22 ஜூலை, 2010

டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த இலங்கையின் முத்தையா முரளிதரன்

ஜூலை.22:டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை முரளிதரன் பெற்றுள்ளார்.

இந்தியா இலங்கை இடையே 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நடந்து வருகிறது.

நேற்று நடந்த 4 வது நாள் ஆட்ட நேர முடிவின் போது 798 விக்கெட்களுடன் இருந்த முரளிதரன் இன்று 5 வது ஆட்டத்தில் ஹர்பஜன், ஓஜா ஆகிய இருவரின் விக்கெட்களை எடுத்தார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் எடுத்து முரளிதரன் சாதனை படைத்துள்ளார். அவர் இன்னிங்சில் 5 விக்கெட்களும், 2 வது இன்னிங்சில் 3 விக்கெட்களும் எடுத்து உள்ளார்.

தனது 133 வது டெஸ்டில் விளையாடும் முரளிதரன் காலே போட்டியுடன் டெஸ்டில் இருந்து விடைபெறுகிறார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த இலங்கையின் முத்தையா முரளிதரன்"

கருத்துரையிடுக