கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டம் மணப்பாறையில், கடலில் விழுந்து பலியான திருச்சி கல்லூரி மாணவரின் உடல் இன்று வரை கிடைக்கவில்லை. இதனால் பெற்றோர் கண்ணீருடன் ஊர் திரும்பினர்.
திருச்சி பீமா நகர் பகுதியை சேர்ந்த 150 பேர் கடந்த 16-ம் தேதி காலையில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். கடற்கரை சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு சூரிய உதயத்தையும், கடல் அழகையும் ரசித்து கொண்டிருந்த போது உடன் சுற்றுலா வந்த மணிகண்டன், அவரது நண்பர் முஜிபுர் ஆகிய இருவரும் காமராஜர் மணிமண்டபத்தின் பின்புறம் உள்ள மணப்பாறைக்கு சென்றுள்ளனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி முஜிபுர் கடலுக்குள் விழுந்து தத்தளித்தார். இதை கண்ட மணிகண்டன் கடலுக்குள் குதித்து காப்பாற்ற முயன்றார்.
இருவரும் கடலில் குதித்ததை கண்ட சுற்றுலா பயணிகள் அவர்களை மீட்க முயற்சித்தனர். மணிகண்டனை மட்டும் காப்பாற்ற முடிந்தது. மணிகண்டனை பெருமாள்புரத்தில் உள்ள மருத்துவமணையில் சேர்த்தனர்.
மாணவர் கடலுக்குள் விழுந்ததை அடுத்து தீயணைப்பு துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஏழு நாட்கள் ஆகியும் முஜிபுர் உடல் இன்னும் கரை ஒதுங்கவில்லை. இதனால் திருச்சியில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்து மகனின் உடலையாவது பார்த்து விடலாம் என்று தங்கியிருந்த பெற்றோரும், உடன் வந்தவர்களும் சோகத்துடன் ஊர் திரும்பினர்.

0 கருத்துகள்: on "குமரி கடலில் பலியான மாணவன் உடல் கிடைக்கவில்லை: சோகத்தில் பெறறோர்"
கருத்துரையிடுக