12 ஜூலை, 2010

ஏழு மாதங்களில் 90 அமெரிக்க வங்கிகள் திவால்

நியூயார்க்:அமெரிக்காவில் கடந்த 7 மாதங்களில் 90 வங்கிகள் திவாலாகியுள்ளன.

சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை நீங்கி பொருளாதார நிலை மேம்பட்டுள்ள போதிலும் அமெரிக்காவில் வங்கிகள் திவாலாவது தொடர்கதையாகி வருகிறது.

அமெரிக்காவில் வேலையின்மையும் இப்போது அதிகரித்து வருகிறது. வேலையில்லாதவர்களில் விகிதம் 9 சதவீததத்தைத் தாண்டியுள்ளது. வரும் நாள்களில் மேலும் பல வங்கிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் தெரிகிறது.

2010-ம் ஆண்டில் சராசரியாக ஒரு மாதத்துக்கு 13 வங்கிகள் என்ற அடைப்படையில் மூடப்பட்டுள்ளன.

முக்கிய வங்கிகளான ஹோம் நேஷனல் வங்கி, பே நேஷனல் வங்கி, யூஎஸ்ஏ வங்கி, ஐடியா பெடரல் சேவிங்ஸ் வங்கி ஆகியவை ஜூலை 9-ம் தேதி மூடப்பட்டன.

வேலைவாய்ப்பு இன்மை விகிதம் அதிகரிப்பதே சிறிய மற்றும் நடுத்தர வங்கிகள் திவால் ஆவதற்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளின் டெபாசிட்களுக்கு காப்பீடு வழக்கும் பெடரல் டெபாசிட் காப்பீட்டு நிறுவனத்தில் (எஃப்டிஐசி) சுமார் 8 ஆயிரம் வங்கிகள் காப்பீடு செய்துள்ளன. இப்போது வங்கிகள் திவால் ஆனதால் சுமார் 81 மில்லியன் டாலர் அந்த காப்பீட்டு நிறுவனத்துக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் அமெரிக்காவில் மொத்தம் 140 வங்கிகள் மூடப்பட்டன. இதே நிலை தொடர்ந்தால் இந்த ஆண்டு அதைவிடக் கூடுதலாக வங்கிகள் மூடப்படும் அபாயம் உள்ளது.

வங்கிகள் தொடர்ந்து மூடப்படுவதால், நாட்டின் வங்கி முறையே முழுத் தோல்வி அடைந்து விடும் வாய்ப்பு உள்ளது என்று எஃப்டிஐசி தலைவர் ஷீலா சி பேயர் தெரிவித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஏழு மாதங்களில் 90 அமெரிக்க வங்கிகள் திவால்"

கருத்துரையிடுக