டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் 3-வது டெர்மினலை பிரதமர் மன்மோகன்சிங் நேற்று திறந்து வைத்தார். ரூ.9,000 கோடி முதலீட்டில் 37 மாதங்களில் இந்த முனையம் கட்டப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 6-வது பெரிய டெர்மினலாக இது விளங்குகிறது. மொத்தம் 54 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டதாக இது அமைந்துள்ளது.
துபை, பெய்ஜிங், சிங்கப்பூர், பாங்காக், மெக்ஸிகோ சிட்டி ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக பெரிய விமான நிலையமாக இது விளங்குகிறது.
0 கருத்துகள்: on "டெல்லியில் ரூ.9,000 கோடியில் டெர்மினல் 3 விமானநிலையம் திறப்பு"
கருத்துரையிடுக