பயங்கரவாதத்திற்கெதிரான சட்டங்கள் இந்திய முஸ்லிம்களை சகட்டுமேனிக்கு சிறையில் அடைப்பதற்கான கருவிகளாக இந்திய அரசால் பயன்படுத்தபட்டு வருவதாக சர்வதேச சிறுபான்மை உரிமைகள் குழுவின் (Minority Rights Group International) 2010-ம் ஆண்டறிக்கை கூறுகிறது. இந்தக் குழு லண்டனை மையமாக வைத்து இயங்கி வருகின்றது.
முஸ்லிம்களை சட்டவிரோதமாக கைது செய்துள்ளது தெளிவாகிய பின்னரும், அரசு விசாரனை அதிகாரிகளுக்கெதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்த அறிக்கை குற்றஞ் சுமத்தியுள்ளது.
"சிறுபான்மையினரை அக்கிரமம் செய்து அட்டூழியம் புரிபவர்கள் குற்றங்களிலிருந்து தப்பிக்க வைக்கபடுகிறார்கள். ஒரு சில குற்றங்களில் மட்டுமே விசாரணை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று சர்வதேச சிறுபான்மை உரிமைகள் குழுவின் தெற்காசியப் பிரிவின் தலைவர் ஃபராள் மிஹ்லான் கூறினார்.
டெல்லி பாட்லா ஹவுசில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். உத்திரபிரதேசத்தில் சில இடங்களில் முஸ்லிம் அப்பாவி இளைஞர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு அநியாயமாக கைது செய்யப்பட்டார்கள்.
இவைகளுக்கெதிராக 2009 ஜனவரியில் ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கிப் போராடினார்கள். மும்பை இனப் படுகொலைக்கு பிறகு 180 தினங்கள் வரை ஒரு குற்றம் சுமத்தபடாமல் ஒரு ஆளைப்பிடித்து சிறையில் அடைக்கலாம் என்றொரு சட்டத்தை கொண்டு வரவும் அரசு முயற்சி செய்தது.
2009 ஏப்ரலில் மத்திய பிரதேசத்தில் ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் தாடி வளர்த்ததைக் கண்டித்து வெளியேற்றப்பட்டான் ஒரு முஸ்லிம் மாணவன். அவன் கொடுத்த வழக்கை ஏற்றுக்கொள்ளாமல் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை சுட்டிக் காட்டுகின்றது இந்த அறிக்கை.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பயங்கரவாதத்திற்கெதிரான சட்டம் இந்தியாவில் துஷ்பிரயோகம் - சிறுபான்மை உரிமைகள் குழு"
கருத்துரையிடுக