4 ஜூலை, 2010

கொலை விவகாரம் மத்தியபிரதேச பா.ஜ.க அமைச்சர் இராஜினாமா

கடந்த மாதம் இராளியோர் என்ற இடத்திற்கு அருகில் கொல்லப்பட்ட ஒர் இளைஞரின் கொலை விவகாரம் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் உயர்ந்துள்ளன. இந்த சூழ்நிலையில் மத்தியபிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் அனுப் மிஸ்ரா இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 23ம் தேதி 17 வயது இளைஞர் ஒருவர் இராளியோருக்கு அருகில் பெலா என்ற கிராமத்தில் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார் அந்த இளைஞருக்கும் அமைச்சர் அனுப் மிஸ்ராவின் மனைவி நடத்தும் கல்லூரிக்குமிடையில் கடும் பிரச்சனை நிலவி வந்ததாம். இதனால் அந்த இளைஞரின் கொலையில் அமைச்சரின் நெருங்கிய சொந்தக்காரர்களுக்கு பங்கு உண்டு என்று குற்றச்சாட்டு உயர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் கடந்த வெள்ளிக்கிழமை இராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுத்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கொலை விவகாரம் மத்தியபிரதேச பா.ஜ.க அமைச்சர் இராஜினாமா"

கருத்துரையிடுக