
இந்த 1.147 ட்ரில்லியன் $ செலவு, இரண்டாவது உலக போருக்கு செலவு செய்த 4.1 ட்ரில்லியன் $க்கு அடுத்த நிலையில் உள்ளது. எனினும் தீவிரவாத்திற்கு எதிரான போர் இன்னும் முடிவடையாத நிலையில், போர் தொடர தொடர இந்த மதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இந்த மதிப்பு இராணுவ நடவடிக்கைகளுக்கான நேரடி செலவுகளை மட்டுமே குறிக்கிறது.மற்ற போர்களுக்கு செய்த இதர செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை. அமெரிக்க பொருளாதாரத்தில் தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு பல ட்ரில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளது. அதை நம்பகத்தனமான எண்ணில் வரையறுக்க முடியாது.
தற்போது உள்ள பொருளாதார சூழலில்தான் இந்த அதிக செலவிற்காக முரண்பாடு ஏற்பட்டுள்ளது.முன்னேறிக்கொண்டிருக்கும் நாட்டின் வரவு செலவுகளை ஊக்கப்படுத்துவதாக ஒபாமா அரசு உறுதியளித்துள்ளது. அதனால் தீவிரவாதத்திற்கெதிரான போர் உட்பட இன்னும் பல போர்களுக்கு நிதியளிப்பார் என்று தெரிகிறது.
0 கருத்துகள்: on "9/11க்குப் பிறகு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் போரில் வீணடிக்கப்பட்டுள்ளது"
கருத்துரையிடுக