அஹமதாபாத்,ஜூலை25:இஸ்ரத் போலி என்கவுண்டர் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பது குறித்த வழக்கின் விவாதம் மூன்றாம் நாளும் நீதிமன்றத்த்தில் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது இஸ்ரத்தின் வழக்கறிஞர் சயித், தமாங் கமிட்டி குறிப்பிட்டுள்ள பாலிஸ்டிக் சைன்ஸ் என்பதைப் பற்றி விவரித்தார்.
பாலிஸ்டிக் சைன்ஸ் என்பது ஆயுதங்களின் செயல்பாட்டை பற்றிய சிறப்பு பாடம், இதன் மூலம் பூதக்கண்ணாடியை வைத்து எந்த துப்பாக்கியிலிருந்து எந்த குண்டு வெளிப்பட்டது என்பதை அறியலாம்.
இஸ்ரத்தின் பாலிஸ்டிக் அறிக்கையின்படி போலீஸ் ஏகே-56 ரக துப்பாக்கியிலிருந்து சுட்டுவிட்டு அவர்களிடம் ஆயுதங்களை வைத்துவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி தமாங் அறிக்கையை சுட்டிக்காட்டி சயித் வாதிட்டார்.
மேலும் தமாங்கின் அறிக்கைக்கு சவால் விடும் ஜி.எல்.சிங்காலின் மனுவை மாநில அரசு ஆதரிப்பது ஏனெனில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அதிகாரிகளில் சிங்காலும் ஒருவர் என்றார்.
சிங்கால் தனது மனுவில் மாநில அரசையே பிரதிவாதி ஆக்கியுள்ளார். வழக்கின்போது தமங்கின் அறிக்கையை ரத்து செய்யும் சிங்காலின் வழக்கை மாநில அரசு ஆதரித்துள்ளது.
உயர் போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கையில், மாநில அரசு இவ்வாறு நடந்துகொண்டால், அரசை எப்படி இவ்வழக்கில் நம்பமுடியும் என்று சயித் கேள்வி எழுப்பினார்.
சயித்தின் வாதத்தை கேட்டறிந்த நீதிபதி இவ்வழக்கை ஆகஸ்ட் 12 வரை ஒத்திவைத்தார்.

0 கருத்துகள்: on "சி.பி.ஐ விசாரணை கோரும் இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 12ம் தேதி வரை ஒத்திவைப்பு"
கருத்துரையிடுக