25 ஜூலை, 2010

வேலைக்கு ஆளெடுக்கும் நடவடிக்கை அதிகரிப்பு

ஜூலை.25:கடந்த 18 மாதங்களில் முதல் முறையாக பல்வேறு நிறுவனங்களில் ஆளெடுப்பு நடவடிக்கைகள் படுவேகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கும் காலாண்டின் தொடக்கத்தில் 6 சதவீதமாக மட்டுமே இருந்த ஆளெடுப்பு நடவடிக்கைகள், இந்த ஜூலை மாதம் 64 சதவீதமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

டீம்லீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில், ஆளெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான இன்டெக்ஸ் புள்ளிகள் 5லிருந்து 61 ஆக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு காலாண்டுகளில் இது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் நடத்தப்படும் ஆய்வின் அடிப்படையில் ஆளெடுப்பு குறித்த அறிக்கையை ஒவ்வொரு காலாண்டு இறுதியிலும் டீம் லீஸ் வெளியிடுகிறது.தற்போதைய ஆய்வின்போது நாடு முழுவதும் 568 நிறுவனங்கள் கணக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

வேலைவாய்ப்பு அதிகரிப்பு,வேலைக்கு ஆளெடுக்கும் நடைமுறைகள் உள்ளிட்டவை அதில் கணக்கெடுத்துக் கொள்ளப்படும். நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து இது உதவுகிறது. டெல்லி, மும்பை, அகமதாபாத் நகரங்களில் கடந்த காலாண்டை விட இந்த காலாண்டில் ஆளெடுப்பு விகதம் நல்ல உயர்வைக் கண்டுள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு காலாண்டில் கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் ஆளெடுப்பு நடந்து வருகிறதாம். அதேசமயம், ஹெல்த்கேர், பார்மசூட்டிகல்ஸ் ஆகிய துறைகளில் சற்று தேக்க நிலை காணப்படுகிறது.

கட்டமைப்புப் பணித் துறை, உற்பத்தி,தயாரிப்புத் துறை,டெலிகாம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. நாட்டின் 2ம் நிலை நகரங்களில்தான் ஆளெடுப்பு அதீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. பெருநகரங்களை விட 2ம் நிலை நகரங்களை நிறுவனங்கள் அதிகம் விரும்புவதே இதற்கு முக்கியக் காரணம்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வேலைக்கு ஆளெடுக்கும் நடவடிக்கை அதிகரிப்பு"

கருத்துரையிடுக