ஐக்கிய நாடுகள் சபையில் மகளிர் அமைப்பை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மகளிர்க்கு சம உரிமை அளிக்கும் வகையில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்துக்கு ஆதரவாக 192 பேர் வாக்களித்தனர். ஐக்கிய நாடுகள் சபை மகளிர் அமைப்பு என்ற பெயரில் இது செயல்படும். இத்தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அலி அபிதிசலாம் திரேகி கொண்டு வந்தபோது அதை உறுப்பினர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று நிறைவேற்றினர்.
இது மிகவும் முக்கியமான தருணம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை மகளிர் அமைப்பு சர்வதேச அளவில் பெண்களுக்கு சம அதிகாரத்தைப் பெற்றுத் தருவதற்குப் பாடுபடும்.
சர்வதேச அளவில் பெண்கள், சிறுமிகளுக்கெதிரான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இவற்றை சமாளிப்பது மிகப் பெரும் சவாலாக உள்ளது. இத்தகைய சூழலில் ஐக்கிய நாடுகள் சபையில் மகளிர் அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது என்று அபிதிசலாம் குறிப்பிட்டார்.
இந்த மகளிர் அமைப்பை ஏற்படுத்துவதற்கு ஒப்புதல் பெற நான்கு ஆண்டுக்காலம் ஆகியுள்ளது. இதற்காக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மகளிர் அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள பிற மகளிர் அமைப்புகள் ஒன்றிணைந்து இதை மேற்கொண்டன.
மகளிர் மேம்பாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு பெண்கள் முன்னேற்றத்துக்கு முழுமையாக பாடுபடும் என துணை பொதுச் செயலர் ஆஷா ரோஸ் மிகிரோ தெரிவித்தார்.
0 கருத்துகள்: on "ஐ.நா. சபையில் பெண்கள் அமைப்பு"
கருத்துரையிடுக