27 ஜூலை, 2010

ஷொராஹ்ப்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் சி.பி.ஐ. நோட்டீஸ்

அகமதாபாத்,ஜூலை27:குஜராத்தில் ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் நடந்த போது போலீஸ் டி.ஜி.பிக்களாக இருந்த மாத்தூர்,ராய்கர் ஆகியோருக்கும் இதில் சம்மந்தம் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அவர் களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த உள்ளது. இதற்காக அவர்களுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

குஜராத்தில் 2005-ம் ஆண்டு போலீசார் ஷொராஹ்ப்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி ஆகியோரை என்கவுண்டர் மூலம் சுட்டு கொன்றனர். இது போலி என்கவுண்டர் என்பது பின்னர் தெரிய வந்தது. இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்படட வழக்கில் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே குஜராத், ராஜஸ்தான் போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு போலி என்கவுண்டர் நடத்த உத்தர விட்டது குஜராத் உள்துறை மந்திரி அமீத்ஷா என்பது தெரிந்தது.

எனவே சி.பி.ஐ. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். நேற்று சி.பி.ஐ. முன்பு ஆஜரானார்.அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.நீதிபதி அவரை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஷொராஹ்ப்தீன் ஷேக் மீது போலி என்கவுண்டர் நடத்த அமீத் ஷா உத்தரவிட்டதை அதிகாரிகள் சிலர் முன்னின்று நிறைவேற்றி உள்ளனர். அவர்கள் இதுவரை வழக்கில் சேர்க்கப்பட வில்லை.

இப்போது சி.பி.ஐ. போலீசார் அந்த அதிகாரிகள் தொடர்பு பற்றி ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து அவர்களும் கைது செய்யப்படலாம்.

என்கவுண்டர் நடந்த போது போலீஸ் டி.ஜி.பிக்களாக இருந்த மாத்தூர்,ராய்கர் ஆகியோருக்கும் இதில் சம்மந்தம் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அவர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த உள்ளது. இதற்காக அவர்களுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஷொராஹ்ப்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் சி.பி.ஐ. நோட்டீஸ்"

கருத்துரையிடுக