மெக்சிகோ வளைகுடா பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஆழ்கடல் எண்ணெய் கிணறு ஏப்ரலில் வெடித்தது.
அப்போது முதல் லட்சக்கணக்கான பேரல் கச்சா எண்ணெய், கடலில் கலந்து கொண்டிருந்தது. அதை அடைக்க பிரிட்டிஷ் பெட்ரோலிய குழுவினர் போராடி வந்தனர்.
தொடர்ந்து எண்ணெய் கிணறு கொழுந்து விட்டு எரிந்ததால் பணியை முடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
எண்ணெய் கிணற்றில் இருந்து 3 வால்வுகள் வழியாக கடலில் எண்ணெய் கலந்து வந்தது. அவற்றில் 2 வால்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராடி அடைக்கப்பட்டன.
3வது வால்வு பிரம்மாண்ட மூடியை கொண்டு நேற்று வெற்றிகரமாக அடைக்கப்பட்டது. அதன்மூலம், கடலில் எண்ணெய் கலப்பது முற்றிலும் தடுக்கப்பட்டது.
0 கருத்துகள்: on "மெக்சிகோ வளைகுடா- எண்ணெய் கசிவு போராடி நிறுத்தம்"
கருத்துரையிடுக