18 ஜூலை, 2010

இந்து மதத்தை புண்படுத்துவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் சோனியா காந்திக்கு கோர்ட்டு சம்மன்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இந்து கடவுள் துர்காவாக சித்தரித்த போஸ்டர் 2007-ம் ஆண்டில் உத்தரபிரதேசத்தில் வெளியிடப்பட்டது. இந்த படம் மொர்தாபாத் காங்கிரஸ் அலுவலகத்தில் ஓட்டப்பட்டு இருந்தது.

இந்து மதத்தை புண்படுத்துவதாக கூறி அவர் மீது வக்கீல் சுதிர்குமார் ஒஜா பீகார் மாநிலம் முசாப்பூர் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சோனியா காந்தியோ அல்லது அவரது சார்பில் அவரது வக்கீலோ வருகிற 29-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ்.கே. ஸ்ரீவத்சவா உத்தர விட்டுள்ளார்.

இதேபோல இதே நாளில் ஆஜராக உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுனா முர்தாபாத் மாவட்ட தலைவர் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்து மதத்தை புண்படுத்துவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் சோனியா காந்திக்கு கோர்ட்டு சம்மன்"

கருத்துரையிடுக