டெல்லி:பிள்ளைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டம் ஒன்று விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி கிருஷ்ணதிரத் கூறுகையில்,"சிலர் தங்கள் குழந்தைகளை அளவுக்கு மீறி அடித்து துன்புறுத்துகிறார்கள்.அவர்களை தண்டிக்க இந்த சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் பெறப்படும்" என்றார்.
குழந்தைகளை துன்புறுத்துவதாக முதன் முதலாக கைது செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க இந்த சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அதே பெற்றோர் குழந்தைகளை அடித்ததாக பிடிபட்டால், அவர்களுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
அமெரிக்காவில் குழந்தைகள் பாதுகாப்புக்கு என்று வலுவான சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின்படி தன்னை துன்புறுத்தும் பெற்றோருக்கு எதிராக, சிறுவர், சிறுமியர் கோர்ட்டில் வழக்குத் தொடர முடியும்.
அதே பாணியில் இந்தியாவிலும் வர இருக்கும் சட்டத்தில் உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே எதிர்காலத்தில் அளவுக்கு அதிகமாக அடிக்கும் பெற்றோர் மீது இந்திய குழந்தைகளும் வழக்குத் தொடர முடியும்.
பெற்றோர் மீது மட்டு மின்றி உறவினர்கள்,பக்கத்து வீட்டுக்காரர்கள் மீதும் ஒரு குழந்தையால் வழக்குத் தொடர இந்த சட்டத்தில் வாய்ப்பு உள்ளது. குழந்தை தொழிலாளர் முறையை ஒடுக்க இந்த சட்டம் பயன் படுத்தப்படும்.
இதுவரை கல்விக்கூடங்கள் காப்பகங்கள் போன்றவற்றில் குழந்தைகளை அடிப்பவர்களுக்கு மட்டும் தண்டனை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பெற்றோருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்ய உள்ளது.

0 கருத்துகள்: on "பெற்றோர்களே உஷார்! பிள்ளைகளை அடித்தால் ஓராண்டு சிறை- வருகிறது அதிரடிச் சட்டம்!"
கருத்துரையிடுக