10 ஜூலை, 2010

முழு முகமாற்று அறுவை சிகிச்சை - ஃபிரான்ஸ் டாக்டர் சாதனை

பாரிஸ்:விபத்தில் சிக்கி முகம் சிதைந்த நிலையில் உள்ள வர்களுக்கு முகமாற்று ஆபரேசன் செய்யப்பட்டு வருகிறது.முகத்தில் சிதைந்த பாகங்கள் மட்டும் அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் மறு சீரமைக்கப்படுகிறது. ஆனால், முகம் முழுவதையும் மாற்றும் வகையில் முழு முகமாற்று அறுவை சிகிச்சை பிரான்சை சேர்ந்த டாக்டர் லாரண்ட்லான் டியரி செய்து சாதனை படைத்துள்ளார்.

மரபணு கோலா நினால் முகத்தில் பாதிப்பு ஏற்பட்ட 35 வயது வாலிபர் ஒருவர் டாக்டர் லாரண்ட் லான்டியரிடம் சிகிச்சைக்காக வந்தார். முகம் முழுவதும் அகோரமாக இருந்த அவரை டாக்டர் லாரண்ட் குழுவினர் பாரிஸ் புறநகர் பகுதியில் உள்ள எளுன்ரி மாண்போர் ஆஸ்பத்திரியில் வைத்து முகமாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.

இதற்கு முன்பு நாயினால் கடித்து குதறப்பட்ட ஒரு பெண்ணின் மூக்கு, வாய், தாடை உள்ளிட்ட பகுதிகளை இக்குழுவினர் முகமாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

ஆனால் தற்போது கண் இமை,கண்ணீர் நாளம் போன்றவற்றிலும் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதற்கு முன்பு யாரும் இது போன்ற அறுவை சிகிச்சை செய்தது இல்லை. இது தான் உலகிலேயே முதன் முதலாக நடத்தப்பட்ட முழு முக அறுவை சிகிச்சை ஆகும்.

இந்த ஆபரேசனை வெற்றிகரமாக நடத்தி முடிக்க சுமார் 12 மணி நேரம் ஆனது. இது டாக்டர் லாரண்ட்லாண்டி நடத்தப்பட்ட 12-வது முகமாற்று அறுவை சிகிச்சை ஆகும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முழு முகமாற்று அறுவை சிகிச்சை - ஃபிரான்ஸ் டாக்டர் சாதனை"

கருத்துரையிடுக