10 ஜூலை, 2010

7/11 மும்பை இரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: குற்றவாளியை அடையாளம் காண்பதில் முக்கிய சாட்சிகள் தோல்வி

மும்பை கடந்த ஜூலை 7,2006 மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய சாட்சியான சுனில் குமார்,குற்றம் சுமத்தப்படுள்ள டாக்டர் தன்வீர் அன்சாரியை அடையாளம் காண்பதில் தோல்வியுற்றார்.

அதேப்போல,மற்றொரு சாட்சியான மேஹுள் சிங்க் அன்சாரியை அடையாளம் காணும்போது,போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் செய்கையில் சிங்கிற்கு அன்சாரியை காட்டியதை தொடந்து நீதிமன்றத்தில் சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டிராவல் ஏஜெண்ட் நிறுவனத்தை நடத்தும் அனில் குமாரிடம், கடந்த 2006ல், சீருடை அணியாத போலீசார் அவரின் அலுவலகத்திற்கு தன்வீருடன் வந்து, தன்வீரின் முகமறைப்பு அகற்றப்படாத நிலையில் பாஸ்போர்டை வாங்கிச் சென்றுள்ளனர்.

நான்கு வருடத்திற்குப் பிறகு,நீதிமன்றத்தில் அதே பாஸ்போர்ட்டை உறுதிசெய்ய முடிந்த குமாரால் டாக்டர் தன்வீரை அடையாளம் காட்ட இயலவில்லை.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு,நான்கு ஐந்து ஆண்டுகள் கழிந்துவிட்டதால், தன்வீர் யார் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று குமார் ஒப்புக்கொண்டார்.

முன்னதாக தான் கூறிய வாக்குமூலத்தை,போலீசார் ஒரு போதும் வாசிக்கவோ அல்லது படித்தோ காட்டியது கிடையாது என்றும் குமார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மற்றொரு சாட்சியான மேஹுள் சிங்க் அன்சாரியை எப்படி தீவிரவாதி என்று உறுதிசெய்ததை விவரித்தார்.

அன்சாரி, தான் பணிபுரியும் மருத்துவமனையில் 3 பாட்டில்களில் ரசாயனத்தை பதுக்கிவைத்திருந்ததாகவும்,அதை பின்னர் போலீஸ் கைபற்றியதாகவும் மேஹுள் சிங்க் தெரிவித்தார்.

நீதிபதி அவரிடம் தன்வீரை அடையாளம் காட்டச் சொன்னபோது,சிங்க் தினறியதால், பார்வையாளர்களில் அமர்த்திருந்த ஒரு மனிதர் செய்கைமூலம் தன்வீரை காட்ட, தன்வீர் இதைச்சுட்டிக்காட்டி வீரியத்துடன் நீதிபதியிடம் முறையிட்டார்.

பின்னர் நீதிமன்றத்தில் தன்னை போலீஸ் கான்ஸ்டபிள் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அம்மனிதரை மேஹுள் சிங்க் மற்றும் தன்வீர் உறுதி செய்தனர். வழக்கின் வாதங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

இவ்வழக்கை ஜமாஅத்-இ-உலமா ஹிந்த் நடத்திவருகிறது.குற்றம் சாட்டப்பட்டுள்ள 13 முஸ்லிம்களுக்காக, மொகாஷி, பிரகாஷ் ஷெட்டி, வஹாப் கான், ஹசன் மொமின் மற்றும் காலித் ஆஸ்மி ஆகிய ஐந்து வக்கீல்களை கொண்டு அந்த அமைப்பு போராடுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "7/11 மும்பை இரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: குற்றவாளியை அடையாளம் காண்பதில் முக்கிய சாட்சிகள் தோல்வி"

கருத்துரையிடுக