20 ஜூலை, 2010

இஷ்ரத் ஜஹான் வழக்கில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது விசாரணை குழு

காந்திநகர்:குஜராத் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு போலியாக குற்றஞ்சாட்டி துப்பாக்கிசூடு நடத்தி கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் வழக்கில் வெள்ளியன்று இடைக்கால அறிக்கை சமர்ப்பித்தது.

மேலும் விசாரணையை முழுவதும் முடிக்க இன்னும் கால அவகாசம் கேட்டுள்ளது. வழக்கு முடிந்து காலம் கடந்து விட்டதாலும்,எந்த குறிப்பேடுகளும் கிடைக்காததாலும், 2004 ம் ஆண்டு ஜூன் 1 முதல் ஜூன் 20 வரை முக்கிய போலீஸ் அதிகாரிகள், பாதிக்கப்பட்டோர்களின் தொலைப்பேசி மற்றும் கைப்பேசி பதிவுகளை பாதுகாக்க தவறிவிட்டதாக இந்த குழு அறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளது.

ஜூன் 16, 2004 அன்று முதலமைச்சர் மோடியை கொல்லும் திட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பாவில் இருந்து வந்தவர்கள் என்று இஷ்ரத் உள்பட நான்கு நபர்கள் அஹமதாபாத் புறநகர் பகுதியில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கூடுதல் போலீஸ் இயக்குனர் ப்ரமோத் குமார் தலைமையில் இந்த சிறப்பு விசாரணைக்குழு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டது.

இஷ்ரத்தின் தாயார் கொடுத்த மனுவின் பெயரிலேயே இந்த குழு நியமிக்கப்பட்டது.அவரே தற்போது சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்க கோரியுள்ளார்.

இந்த குழுவை கடந்த நவம்பர் மாதமே அறிக்கை சமர்ப்பிக்க கோரியிருந்தது, ஆனால் கூடுதல் காரணங்களால் குறிப்பிட்ட தேதியில் முடிக்க முடியவில்லை என்றும் கால அவகாசமும் கோரியிருந்தது.

63 பேரிடம் வாக்குமூலம் பெற்றிருப்பதாகவும், சம்பவம் நடந்து நாளாகிவிட்டதால் யாராலும் தெளிவாக கூறமுடியவில்லை. பத்திரிக்கைகளிலும் மக்களை இது தொடர்பாக தகவல் தர அழைத்தும் பலனில்லை என்று சிறப்பு குழு அறிக்கையில் கூறியிருக்கிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஷ்ரத் ஜஹான் வழக்கில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது விசாரணை குழு"

கருத்துரையிடுக