20 ஜூலை, 2010

குஜராத் இனப் படுகொலை: பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈட்டில் மோசடி

வதோதரா:2002 குஜராத் இனப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈடுகள் சரியாக அடைவதில்லை என பலமுறை மனித உரிமை ஆணையங்களுக்கும்,சிறுபான்மையின கமிஷன்களுக்கும் புகார்கள் வந்துள்ளன.

தற்போது முதல் முறையாக நஷ்டஈட்டை கொள்ளையடித்ததாக 14 அரசு மற்றும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புபேன்சிங் பாபோர் என்பவரால் பகோர் காவல் நிலையத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கில், சுமார் ரூ.38.25 லட்சம் அரசு கஜானாகளிளிருந்து சுருட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 பேரில்,12 பேர் தற்போதைய அரசு அதிகாரிகள் ஆவர். மனுதாரரின் கூற்றுப்படி 2002-2009 திலிருந்து பதிவியில் இருந்த அரசு அதிகாரிகளால் இந்நஷ்டஈடுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பணம் பெறாத நிலையில், அவர்கள் பணம் பெற்றதாக போலி ஆவணங்களை தயாரித்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையடித்தவர்களில் கிளர்க்கிலிருந்து தாலுகா மூத்த அதிகாரிகள் வரை அனைவருக்கும் பங்குண்டு என்பதாக கூறியுள்ளார்.

ஒருவருக்கொருவர் ஒத்துழைத்த பிறகு இவர்கள் அரசு சார்பாக போலி சுற்று அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் மீது ஏமாற்றுதல், மோசடி, கிரிமினல் நடவடிக்கைகள் என பல பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

"நாங்கள் இது குறித்து விசாரித்து வருகின்றோம், அனைத்து போலி ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளோம், விரைவில் சில கைதுகள் நடக்கும்" என்பதாக போலீஸ் துணை இன்பெக்டர் சவ்ஹான் தெரிவித்தார்.
TOI

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குஜராத் இனப் படுகொலை: பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈட்டில் மோசடி"

கருத்துரையிடுக