காஸ்ஸாவுக்கு உதவிப் பொருட்கள் கொண்டுச் சென்ற ஃப்ரீடம் ஃப்ளோடில்லா மீதான தாக்குதலின் போது ராணுவ உயர் மட்டத்தில் தவறு இடம்பெற்றிருப்பதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
இத்தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,புலனாய்வு தகவல்களில் காணப்பட்ட குறைகள் மற்றும் போதிய திட்டமிடல் இன்மை போன்ற குறைபாடுகளையும் இத்தாக்குதல் கொண்டிருப்பதாக இவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
தாக்குதலுக்கான திட்டமிடலை இவ்வறிக்கை விமர்சித்துள்ள போதும் எவரையும் பதவி நீக்குவதற்கான பிரிந்துரை எதுவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
ஆனால், இவ் உதவிக் கப்பல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு படைப்பலத்தைப் பிரயோகிப்பது தான் ஒரே வழி எனத் தெரிவிக்கும் இவ்வறிக்கை இத்தாக்குதலில் ஈடுபட்ட கமாண்டோக்களைப் பாராட்டியுள்ளது.
ரெல் அவிவ்வில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர்களுக்கு இவ்வறிக்கையை சமர்ப்பித்த விசாரணைகளுக்கு தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற ஜெனரல் கியோரா எய்லண்ட் விமர்சித்துள்ளதுடன் பாராட்டியும் உள்ளார்.
இத்தாக்குதலில் சில தவறுகள் இடம்பெற்றுள்ள போதிலும் இஸ்ரேலிய கமாண்டோக்களின் நடத்தை மிகவும் துணிவுமிக்கதென அவர் பாராட்டியுள்ளார்.
இதேவேளை இத்தாக்குதலின் போது சர்வதேச விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை ஆராயும் மற்றொரு விசாரணையொன்று நடைபெற்று வருகிறது.
எனினும் ஐ.நா. தலைமையிலான விசாரணையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: on "ஃப்ரீடம் ஃப்ளோடில்லா மீதான தாக்குதலில் தவறுகளை ஒப்புக்கொண்டது இஸ்ரேல்"
கருத்துரையிடுக