31 ஜூலை, 2010

தேசிய அந்தஸ்தை இழந்தது லாலு கட்சி, மாநில அந்தஸ்தை இழந்த மதிமுக

புதுடெல்லி,ஜூலை31:லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேசிய கட்சி அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் மதிமுகவும் புதுவையில் பாமகவும் மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்துள்ளன.

ஜார்கண்ட் சட்டப் பேரவைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் குறைந்த அளவிலேயே ராஷ்ட்ரீய ஜனதா தளம் வாக்குகளைப் பெற்றது. இதனால், அந்த மாநிலத்தில் கட்சியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.

இது தொடர்பாக டெல்லியில் நடந்த தேர்தல் கமிஷன் விசாரணையில் ஜார்கண்டில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மாநிலக் கட்சி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.

ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்க அக்கட்சி குறைந்தது 4 மாநிலத்தில் மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெற்றிருக்க வேண்டும். பீகார் உட்பட 3 மாநிலங் களில் அங்கீகாரம் பெற்று ள்ள ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஜார்கண்டில் அங்கீகாரம் ரத்து மூலம் தேசியக் கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்றதால் மதிமுகவும் புதுவையில் குறைந்த ஓட்டுக்கள் பெற்ற பாமகவும் அந்தந்த மாநிலங்களில் மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கின்றன. தமிழகத்தில் பாமகவின் மாநிலக் கட்சி அந்தஸ்து நீடிக்கிறது.

தமிழகத்தில் மதிமுக, புதுவையில் பாமக அங்கீகாரம் ரத்து
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்றதால் மதிமுகவும் புதுவையில் குறைந்த ஓட்டுக்கள் பெற்ற பாமகவும் அந்தந்த மாநிலங்களில் மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கின்றன. தமிழகத்தில் பாமகவின் மாநிலக் கட்சி அந்தஸ்து நீடிக்கிறது.

ஜார்கண்ட்டில் ஐக்கிய ஜனதாதளம், அருணாச்சலப் பிரதேசத்தில் அருணாச்சல் காங்கிரஸ், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஆகியவையும் மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்துள்ளன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தேசிய அந்தஸ்தை இழந்தது லாலு கட்சி, மாநில அந்தஸ்தை இழந்த மதிமுக"

கருத்துரையிடுக