31 ஜூலை, 2010

ஹரி மஸ்ஜித் துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி,ஜுலை31:மும்பையில் 1992 ம் ஆண்டு ஹரி மஸ்ஜிதில் நடந்த போலீஸ் துப்பாகிக் சூட்டில் 6 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.இது சம்பந்தமான வழக்கில் சிபிஐ விசாரணையைத் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதிகள் சதாசிவம் மற்றும் தேவ் ஆகியோர் அடங்கிய டிவிசன் பென்ஞ்ச் சிபிஐ விசாரணையை தொடர தீர்ப்பளித்தனர்.

முன்னதாக மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 2008ல் மகாராஷ்டிர அரசு தொடுத்த மனுவை இந்த அமர்வு நீதி மன்றம் நிராகரித்தது.

மும்பை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தொடுத்தது.

மகாராஷ்டிர அரசின் எதிர்ப்பு மனுவையடுத்து 2009ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நிலுவையில் வைத்திருந்தது .

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட பாரூக் முகமது,காசிம் மட்கர் ஆகியோர் கூறுகையில்;"ஹரி மஸ்ஜித்தில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது போலீசார் அநியாயமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் சுதந்திரமான நீதி விசாரணை வேண்டும்" என வலியுறுத்தினர்.

பாபரி மஸ்ஜித் இடிப்பைத் தொடர்ந்து நடந்த கலவரங்களின் போது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹரி மஸ்ஜித் துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி"

கருத்துரையிடுக