19 ஜூலை, 2010

நியூயார்க் நகர பள்ளிகளில் பெருநாள் விடுமுறையை சேர்க்க முஸ்லிம்கள் முயற்சி

நியூயார்க் நகர முஸ்லிம் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் நகர அமைப்புகள் தங்களின் மார்க்கம் சார்ந்த விடுமுறைகளை நியூயார்க் நகர பள்ளிகளின் பட்டியலில் சேர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக சட்ட இயக்குநர்களிடம் தங்களின் திட்டத்தை சேர்க்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

பள்ளி விடுமுறை நாட்கள் பட்டியலில் ஈத்அல் ஃபித்ர் மற்றும் ஈத்அல் அல்ஹாவை சேர்ப்பதால் 9/11 தாக்குதலுக்கு பிறகு நிலவும் முஸ்லிம் விரோத அபிப்பிராயத்தையும், அவநம்பிக்கையையும் குறைக்க உதவும் என்று கூறுகின்றனர்.

நியூயார்க் நகர பள்ளிகளில் 100,000 அல்லது 12 சதவீததிற்கும் மேலான முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயில்வாதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து நூற்றுக்கணக்கானோர் நியூயார்க் சிட்டி ஹாலிற்கு வெளியில் திரண்டு மேயர் ப்லூம் பெர்க்கிற்கு இந்த விஷயத்தை வற்புறுத்தினர்.

இந்த விடுமுறைகள் வார இறுதியிலோ அல்லது மற்ற விடுமுறை நாட்களில் வருவதால் கூடுதலாக 5 நாட்கள் மட்டுமே விடுமுறை விட வேண்டி இருக்கும் என்று கூறுகின்றனர்.

ஆனால் மேயர் ப்லூம்பெர்க் மாணவர்களுக்கு அதிக நாட்கள் விடுமுறை அளிக்ககூடாது என்று இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நியூயார்க் நகர பள்ளிகளில் பெருநாள் விடுமுறையை சேர்க்க முஸ்லிம்கள் முயற்சி"

கருத்துரையிடுக