அல்கொய்தாவைச் சேர்ந்தவர் என்று நம்பப்பட்டு 8 ஆண்டுகளுக்கும் மேலாக குவாண்டனாமோ வளைகுடா பாதுகாவலில் இருக்கும் வழக்கில் அமெரிக்க ஒருங்கிணைந்த நீதிமன்றம் மேலும் ஆதாரங்களை கோரியுள்ளது.
அமெரிக்க படைகளை எதிர்த்து போரிட விரும்புவோருக்கு ஆஃப்கானிஸ்தான் பயணிக்க உதவியதாக அல்ஜீரியாவை சேர்ந்த பெல்காசெம் பென்சாயா என்பவர் மேலும் 5 போஸ்னிய-அல்ஜீரிய குடிமக்களுடன் போஸ்னியாவில் 2001ல் கைதுசெய்யப்பட்டார்.
அமெரிக்க அரசுதரப்பு வழக்கறிஞர்கள் ஆதாரங்களை நிரூபிக்கவில்லையென்றால் பென்சாயாவை விடுவிக்கவேண்டும் என்று முறையீடுகளுக்கான அமெரிக்க நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. பென்சாயாவுக்கும் அல்கொய்தாவுக்கும் உள்ள தொடர்புக்கு எவ்வித நேரடியான ஆதாரங்களையும் அரசு சமர்பிக்கவில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
தனது கட்சிக்காரரை போஸ்னியாவில் அவரது குடும்பத்திடம் அனுப்பும்படி பென்சாயாவின் வழக்கறிஞர் ஒபாமா அலுவலகத்தை கேட்டுக்கொண்டுள்ளார், ஆனால் இதுபற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தீய செயல்களுக்காக குவாடனாமோ பாதுகாவல் மையத்தில் 181 பேர் இன்னும் இருப்பதாக அமெரிக்க அரசு குறிப்பிட்டுள்ளது.எவ்வித குற்றச்சாட்டும், விசாரணையுமின்றி நிறையபேர் இங்கு இருக்கின்றனர்.

0 கருத்துகள்: on "கிட்மோ காவலில் உள்ளவருக்கு எதிராக ஆதாரங்கள் தேவை: அமெரிக்க நீதிமன்றம்"
கருத்துரையிடுக