24 ஜூலை, 2010

போலி வெடிகுண்டு நாடகம் நடத்தி அப்பாவிகளை சிறைலடைத்த உளவுத்துறை அதிகாரி ரத்தின சபாபதியை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

ஜூலை.24:கோவையில் வெடிகுண்டு நாடகம் நடத்தி அப்பாவி முஸ்லிம்களை கைது செய்த உளவுத்துறை அதிகாரி ரத்தின சபாபதி மற்றும் உடந்தையாக செயல்பட்டவர்களை பணி நீக்கம் செய்து சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த ஜூலை 22, 2006ல் கோவை நுண்ணறிவுப் பிரிவு உதவி இணையர் ரத்தினசபாபதி மற்றும் காவல்நிலைய அதிகாரிகள் பால்ராஜ், திருமேனி, கோபாலகிருஷ்ணன், அண்ணாதுரை ஆகியோர் இணைந்து, "கோவையை தகர்க்க சதி, வெடிகுண்டுகளுடன் 5 பேர் கைது" என திட்டமிட்டு வெடிகுண்டு நாடகம் ஒன்றை நடத்தினார்கள். அதில் 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீதும், மனித நீதிப்பாசறையின் மீதும் வெடிகுண்டுப் பழி சுமத்தப்பட்டது.

மனித நீதிப்பாசறை அன்றே இதை மறுத்து அறிக்கை வெளியிட்டது. மேலும் இந்த அநீதிக்கெதிராக போராடவும் களம் கண்டது. மனித நீதிப்பாசறையின் வீரியமிக்க ஸ்திரமான எதிர்ப்புக் குரலாலும், ஒன்றுபட்ட முஸ்லிம்களின் போராட்டத்தினாலும், சமூக நலனிலும், சமூக நல்லிணக்கத்திலும் அக்கறை கொண்ட நல்லுள்ளங்கள் எழுப்பிய குரலாலும் தமிழக அரசு இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வுத்துறை (எஸ்.ஒ.டி)க்கு மாற்றியது.

ஓராண்டு விசாரணைக்குப் பின் அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு துறை [CBCID-SIT] அதிகாரிகள் கோவை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்தனர்.

அதில் சி.பி.சி.ஐ.டி சிறப்புப் புலனாய்வுக் குழுவின் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பாலன் அவர்கள் இப்படிக் குறிப்பிடுகிறார். "பி13 போத்தனுர் காவல்நிலையத்தில் குற்ற எண் 1067/2006ல் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120 (பி) உ/இ வெடிபொருட்கள் சட்டம் 1908 பிரிவு 5ன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (F.I.R) வெடிகுண்டுகள் மற்றும் பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அவையாவும் ஜோடிக்கப்பட்டவை, மற்றும் பொய்யானவை என்று என்னுடைய விசாரணையில் தெளிவாகத் தெரிய வருகின்றது. மேலும் என்னால் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களும் வாக்குமூலங்களும் மேற்கூறப்பட்ட தகவல்களை அறுதியிட்டு உறுதிப்படுத்துகின்றன. எனவே இது பொய் வழக்கு என்று கூறி இவ்வழக்கை நான் முடிக்கின்றேன்". என்றார்.

இவ்வறிக்கை சமர்பிக்கப்பட்டு 3 வருடங்கள் கழிந்த பின்னரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படியான எந்த நடவடிக்கையினையும் அரசு மேற்கொள்ளவில்லை. தெளிவாக குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரும் ரத்தின சபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

எனவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று முன்தினம் (ஜூலை.22) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.




பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தப்பட்டது.

பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் மற்றும் பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்து ஆயிரக்கணக்கானோரை கைது செய்தனர். நேற்று தலைமை செயலகத்தை நோக்கி பேரணியும் நடத்த திட்டமிடப்பட்டது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்;"நாங்கள் கோரிக்கையை வெளிப்படுத்தக்கூட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது வேதனைக்குறியது. மேலும் பேரணியில் கலந்து கொண்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

இது போன்ற ஜனநாயகத்தின் உரிமைகளை பறிக்கும் செயல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யபட்டவர்கள் அனைவரையும் காவல்துறை உடனே விடுவிக்க வேண்டும்." என்றனர்.

மேலும் இப்போராட்டத்தின் மூலம் வெடிகுண்டு நாடகம் நடத்தி 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் வாழ்வை அலங்கோலப்படுத்திய, உளவுத்துறை அதிகாரி ரத்தின சபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள், பால்ராஜ், திருமேனி, கோபாலகிருஷ்ணன், அண்ணாத்துரை ஆகியோர்களை உடனே பணிநீக்கம் செய்து அவர்கள் மேல் குற்ற வழக்கு பதிவு செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.தமிழக அரசு இவ்விசயத்தில் உடனடியாக தலையிட்டு நீதி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 கருத்துகள்: on "போலி வெடிகுண்டு நாடகம் நடத்தி அப்பாவிகளை சிறைலடைத்த உளவுத்துறை அதிகாரி ரத்தின சபாபதியை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்"

Admin சொன்னது…

கடந்த 2006 ஆம் ஆண்டு "கோவையை தகர்க்க சதி" என்று தலைப்பிட்டு பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. அதற்கு காரணமானதாக கூறி ஐந்து இளைஞர்கள் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு ஜூலை 22 அன்று கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவிகள் என்று CBCID போலீசார் விசாரித்து அறிக்கை சமர்ப்பித்து விட்டனர் . அரசாங்கத்திடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த பாலன் அவர்கள் இவ்வழக்கு முழுக்க முழுக்க பொய்யானது ஜோடிக்கப்பட்டது என்றும் இதன் சூத்திரதாரி உளவுத்துறை துணை கமிஷனர் ரத்னசபாபதி என்று அடையாளம் காட்டியுள்ளார்.
எனவே இவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று நாம் போராடி வருகிறோம். ஆனால் முஸ்லிம்களின் இந்த நியாயமான கோரிக்கையை கொச்சைபடுத்தும் விதமாக நமது தமிழக ஊடகங்கள் போராட்டச் செய்தியை திரித்து அல்லது விளங்காமல் வெளியிட்டுள்ளது .
கோவையில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவ வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. மாறாக நமது போராட்டம் வெடிகுண்டு புரளியை பற்றியது என்பதை ஊடகங்கள் விளங்கவில்லை. வெடிகுண்டு நாடகம் அல்லது புரளிக்கு காரணமான உளவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறோம் . ஊடகங்கள் செய்திகள் வெளியிடும்போது இத்தகைய அலட்சியப் போக்கை கைவிட்டு நடுநிலையுடன் உண்மைச் செய்திகள் வெளியிடவேண்டும்

பெயரில்லா சொன்னது…

jinthabad popular front jinthabad

கருத்துரையிடுக